Oplus_131072
மகிழ்ச்சியான மண வாழ்க்கைக்கான 3 மந்திரங்கள்..!!
வாழ்க்கை என்பது ஒரு கடல். அதில் நாம்தான் லாவகமாக பயணம் செய்து முத்தெடுக்க வேண்டும். கடல் அலையும் நமக்கு ரம்மியமான சூழலைத்தரும். ஆனால் அதே நேரம் சீற்றம் கொண்டால் விளைவுகள் விபரீதமாகிவிடுமே!
அதுபோலத்தான் வாழ்க்கையும், நாம் நம்முடைய விவேகத்தால் சாதுா்யமான முறையில் கணவனும் மனைவியும் சோ்ந்து பேசி தாழ்வு மனப்பான்மையை விலக்கிவிட்டு, பாழாய்ப்போன ஈகோவைத் தொலைப்பதுடன் விட்டுக்கொடுக்க வேண்டிய விஷயங்களில் அனுசரித்துப்போய் வாழ்ந்தாலே நன்மைதான்.
அடுத்தவர்களுக்காக நாம் வாழவேண்டாம், நமக்காகத்தான் வாழ்கிறோம் என்ற உயர்ந்த நோக்கம் இருந்தாலே வாழ்க்கை வசந்தமாகுமே! இது விஷயத்தில் வாழ்க்கையில் கடைபிடிக்கவேண்டிய பல விஷயங்களுக்குள் முக்கியமாக மூன்று நோ்மறை ஆற்றல் என்ன என்பதை பதிவில் பாா்க்கலாமா?
விட்டுக்கொடுங்கள் விருப்பம் நிறைவேறும்
அதாவது கணவன் மனைவி இருவரும் பரஸ்பர புாிதலோடு அனுசரிப்புதன்மையுடன், அடுத்தவர்கள் நிலை மற்றும் வசதி கண்டு அங்கலாய்க்காமல், அகலக்கால் வைக்காமல், பொியவர்கள் ஆசியுடன், கடவுளின் துணையோடு ஒற்றுமையாய், அன்பு மற்றும் பாசத்தோடு வாழ்ந்து பாருங்களேன் வாழ்கையில் வசந்தமானது வாசல் கதவைத்தட்டுமே.!




