மகிழ்ச்சி : 8 இடங்களில் மகளிர்க்கு பிரத்தியேக உடற்பயிற்சி கூடம் அமைக்கிறது சென்னை மாநகராட்சி..!!

சென்னை மாநகர பகுதிகளில் எட்டு இடங்களில் மகளிர்க்கு விரதியேக உடற்பயிற்சி கூடம் அமைய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது…

சென்னை மாநகர பகுதிகளில் எட்டு இடங்களில் மகளிர்க்கான பிரத்தியேக உடற்பயிற்சி கூடங்களை மாநகராட்சி நிர்வாகம் அமைத்து வருகிறது, தமிழக மக்கள் தொகையில் 48 சதவீதத்திற்கும் மேற்பட்டோர் நகரப்புறங்களில் வசிக்கின்றனர், அந்த அளவுக்கு நகரப்புறங்களில் வளர்ச்சி அடைந்துள்ளது, அதே நேரத்தில் பணி சுமை மற்றும் பணி சூழல் காரணமாக பெரும்பாலோனரால் காலையில் நேரம் ஒதுக்கி உடற்பயிற்சி மேற்கொள்ள முடியாத சூழ்நிலையில், கட்டூடலை உருவாக்க ஆர்வமுள்ள ஏழை இளைஞர்களுக்கு தனியார் உடற்பயிற்சி கூடங்களின் கட்டணங்கள் எட்டா கனியாக உள்ளன, இதை கருத்தில் கொண்டு சென்னை மாநகராட்சி சார்பில் 198 உடற்பயிற்சி கூடங்களை உருவாக்கியுள்ளன, அதில் ஆறு மகளிர்க்காண உடற்பயிற்சி கூடங்களாக இயங்கி வருகின்றன இவை பெயரளவில் மட்டுமே இயங்கி வருகின்றன, பிரதியாக பயிற்றுனர் நவீன உபகரணங்கள் எதுவும் இல்லை என மகளிர் புகார் தெரிவித்து வருகின்றனர், அண்மைக்காலமாக பெண்களுக்கான உரிமை மற்றும் முக்கியத்துவம் மேலோங்கி வரும் நிலையில் அவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டு வருகிறது இதன் தொடர்ச்சியாக உள்ளாட்சி அமைப்புகளில் போட்டியிடுவதிலும் 50 சதவீதத்துக்கு மேல் இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது, அதன் காரணமாக சென்னை மாநகராட்சியில் மொத்தம் உள்ள 200 வார்டு உறுப்பினர்களில் 103 பேர் மகளிராக உள்ளனர், அவர்கள் அனைவரும் தங்கள் பகுதியில் மகளிர் உடற்பயிற்சி கூடங்களை அமைக்க மாநகராட்சி நிர்வாகத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் அதன் அடிப்படையில் மாநகராட்சி சார்பில் மேலும் 8 மகளிர் உடற்பயிற்சி கூடங்களை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது,மேலும் 80, 81, 82, 85, 87, 195 ஆகிய வார்டுகளிலும் மகளிர் உடற்பயிற்சி கூடங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன, ஒவ்வொரு உடற்பயிற்சி கூடமும் 47 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது, ட்ரெட் மில் உள்ளிட்ட நவீன உபகரணங்களுக்கும் இடம்பெற உள்ளன இவ்வாறு அதிகாரிகள் கூறியுள்ளனர்..!!

Read Previous

வடசென்னையில் வளர்ச்சி திட்டத்தின் கீழ் 1476 புதிய குடியிருப்புகள் அமைப்பதற்கான பணிகளை இம்மாதம் இறுதிக்குள் முதல்வர் தொடங்கி வைக்கிறார் அமைச்சர் சேகர்பாபு தகவல்..!!

Read Next

சென்னையில் அரசு மருத்துவர் மீது தாக்குதல் விரிவான விசாரணைக்கு முதல்வர் ஸ்டாலின் உத்தரவு…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular