மக்களால் பெரும் வரவேற்பை பெற்று வரும் டூரிஸ்ட் ஃபேமிலி..!! திரைப்படத்தின் விமர்சனம் இதோ..!!

சசிகுமார் மற்றும் சிம்ரனின் நடிப்பில் அபிஷன் ஜீவிந்தின் இயக்கத்தில் நேற்று வெளியாகி மக்களால் பெரும் வரவேற்பை பெற்று வரும் படம் தான் டூரிஸ்ட் ஃபேமிலி. இந்த படம் நேற்று வெளியாக இருந்த வேலையில் அவ்வளவாக ஓடாது என்று நிறைய பேர் நினைத்து வந்தனர். அதற்கு காரணம் சூர்யாவின் ரெட்ரோ படமும் நாணியின் ஹிட் 3 படமும் தான். ஆனால் இந்தப் படத்தை ஊடகங்களுக்கு ஏப்ரல் 29ஆம் தேதி காட்டிவிட்டனர்.

ஆகையால் படம் வெளி வருவதற்கு முன்பாகவே நல்ல விமர்சனங்களை பெற்று வந்தது. பலர் இந்த படத்திற்கு 100க்கு 100 மதிப்பெண்களை கொடுத்தனர். ஆகையால் என்னதான் பெரிய படங்களுடன் இந்த படம் வெளி வந்தாலும் திரையரங்குகள் ஹவுஸ் ஃபுல் இல் தான் இருக்கிறது. இந்த படத்தில் ஒரு சண்டைக் காட்சி கூட கிடையாது. முழுமையாக குடும்பங்களுக்கான படமாக எடுத்திருக்கிறார் இயக்குனர்.

தனது 24 வயதிலேயே அதுவும் முதல் படத்திலேயே இப்படி ஒரு கதை களத்தை எழுதி இயக்கி இருப்பதால் பலரும் பாராட்டி வருகின்றனர். இந்தப் படத்தில் பெரிதும் பிரச்சனைகள் இல்லை. அப்படியே இருந்தாலும் அது இந்த படத்தின் பாசிட்டிவ்களால் கண்ணுக்கு தெரியாமல் போய்விடும். வாழ வாழ்வாதாரம் இல்லாமல் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு அத்துமீறி வந்த குடும்பத்தின் பிரச்சினைகளும் அவர்கள் இந்த சமுதாயத்தில் செய்த மாற்றங்களும் தான் இந்த படத்தின் கதைகளும்.

அவர்கள் அப்படி தமிழகத்தில் வசிக்கின்ற பொழுது அவர்கள் வாழும் பகுதியில் என்னென்ன மாற்றங்கள் செய்தார்கள் என்று பார்க்கின்ற பொழுது நம்முள் இருக்கும் மனிதாபிமானமும் மற்றவர்களின் மீது இருக்கும் அக்கறையும் வெளிவரும். படம் முடிந்து வருகையில் நிச்சயம் நீங்கள் ஒரு நிமிடமாவது எழுந்து நின்று கைதட்டி விட்டு தான் வருவீர்கள். இந்த ஆண்டுக்காக மட்டும் இல்லாமல் தமிழ் சினிமாவின் முக்கியமான படமாக இனி இது கருதப்படும். மொத்தத்தில் இந்த படத்திற்கு நிச்சயமாக நாமும் முழு மதிப்பெண்களை தான் கொடுக்க வேண்டும். அனைவரும் கட்டாயம் திரையரங்குக்கு சென்று பார்த்து வாருங்கள்.

Read Previous

பள்ளிகளில் குழந்தைகளை படிக்க வைக்கும் பெற்றோர்களுக்கு வந்த அதிர்ச்சி..!! கட்டாய தேர்ச்சி முறை இனி இந்தியா முழுவதும் ரத்து..!!

Read Next

வாழ்க்கைக்கு தேவையான 10 விஷயங்கள்..!! கண்டிப்பாக அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular