திமுக அரசு மக்கள் மீது புதிய மின்கட்டணச் சுமைகளைச் சுமத்துவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒரு வீட்டில் அல்லது நிறுவனத்தில், இரண்டு மின் இணைப்புகள் இருந்தால், ஒருங்கிணைந்த இணைப்பாகக் கருதி, மின் கட்டணத்தைக் கணக்கிடும் முறை, இம்மாதம் முதல் நடைமுறைக்கு வந்துள்ளதாகத் தெரிகிறது. இரண்டு மின் இணைப்புகள் என்பது பெயர் அடிப்படையிலா? முகவரி அடிப்படையிலா? என்பதற்கான விளக்கம் ஏன் இல்லை” என கேள்வி எழுப்பியுள்ளார்.