மக்களுக்கு மோர், குடிமகன்களுக்கு பீர்..!! சுட்டெரிக்கும் கோடை வெயிலால் அதிகரித்த பீர் விற்பனை.!!

பருவநிலை மாற்றத்தின் காரணமாக இந்தியாவில் கோடை காலத்தில் சராசரி வெப்பநிலை என்பது 44 டிகிரி வரை சென்றது, இந்தியாவில் வட மாநிலங்கள் மட்டுமல்லாது தமிழகம் உட்பட தென் மாநிலங்களிலும் கடுமையான வெயில் மக்களை வாட்டி வதைத்து வருகின்றது.

இந்த சமயத்தில் மக்கள் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க இயற்கையான பழங்கள் மற்றும் காய்கறிகள் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளனர். இதனால் அதன் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதனிடையே குடிமகன்கள் பலரும் கோடை வெயிலில் தாக்கத்திலிருந்து தப்பிக்க பீர் பக்கம் தங்கள் கவனத்தை செலுத்தியுள்ளனர்.

இதனால் கடந்த ஆண்டு ஒப்பிடும்போது நடப்பாண்டின் மே மாதத்தில் பீர் விற்பனை என்பது 27% உயர்த்துள்ளது என டாஸ்மாக் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கடந்த மே மாதம் ஒன்றாம் தேதி முதல் 19ஆம் தேதி வரை மொத்தமாக தமிழ்நாட்டில் 23 லட்சத்து 66 ஆயிரத்து 856 பீர் பாட்டில் பெட்டிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு பொருத்தமட்டில் 18 லட்சத்தி 70 ஆயிரத்து 289 பீர் பாட்டில்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டிருந்த நிலையில் நடைபாண்டில் 27% அதிகம் பீர் விற்பனை செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக காஞ்சிபுரம், சேலம், திருப்பூர், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் அதிக பீர் விற்பனை அடுத்த முதல் நான்கு இடங்களை தக்க வைத்துள்ளது.

Read Previous

நெஞ்சு வலியால் துடிதுடித்த மூதாட்டி பரிதாப பலி..!!

Read Next

வழுக்கி விழுந்தவர்களை தூக்க சென்ற போலீசார்; கல்லால் அடித்த போதை ஆசாமிகள்..!! குடிபோதையில் அட்டகாசம்.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular