மக்களே உஷார் ஜூன் ஒன்றாம் தேதி முதல் தமிழகத்தில் அமலுக்கு வரும் புதிய வாகன சட்டம்..!! மீறினால் ஐந்து வருடம் ஆப்பு தயார்..!!

ஜூன் 1-ஆம் தேதி முதல் புதிய போக்குவரத்து விதிமுறை தமிழகத்தில் அமலுக்கு வர உள்ளது.

தமிழகத்தில் ஏற்கனவே கடுமையான போக்குவரத்து வாகன சட்டம் அமலில் உள்ளது. இருப்பினும் போக்குவரத்து வாகன விதி மீறல்கள் அவ்வப்போது நடைபெற்றுக் கொண்டே வருகின்றது. அதிலும் குறிப்பாக பல்வேறு விபத்துக்கள் 18 வயது நிரம்பாத சிறார்கள் வாகனம் இயக்குவதால் ஏற்படுகின்றது. இவ்வாறு ஏற்படும் விபத்தை குறைப்பதற்கும் மக்களின் நலன் கருதி தற்பொழுது தமிழக வாகன சட்டத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது. இந்த சட்டம் வருகின்ற ஜூன் ஒன்றாம் தேதி முதல் அமுலுக்கு வர உள்ளது.

இந்த சட்டத்தின் படி 18 வயது முடியாதவர்கள் வாகனம் ஓட்டினால் வாகனத்தின் ஆர்சி ரத்து செய்யப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும் 18 வயது நிரம்பாதவர்கள் வாகனம் ஓட்டினால் ரூ. 25,000 அபராதம் மற்றும் அவர்கள் வயது 25 ஆகும் வரை ஓட்டுநர்  உரிமம் வழங்கப்படாது போன்ற  நிபந்தனைகள் வழங்கப்பட்டுள்ளது. இந்த புதிய விதிமுறை வருகின்ற ஜூன் மாதம் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Previous

கூலி தொழிலாளி வங்கிக் கணக்கில் தவறாக செலுத்தப்பட்ட ரூ.32 லட்சம் பணம்..!!

Read Next

ஆண்களே.! தாம்பத்திய உறவில் குதிரை பலம் பெற, இந்த கஷாயத்தை 48 நாட்கள் தொடர்ந்து குடித்து பாருங்க.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular