
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்தே குலதெய்வ வழிபாடு என்பது அனைத்து குடும்பங்களிலும் முக்கியமான ஒன்றாகும். நாம் எந்த தெய்வத்தை வணங்குகிறோமோ இல்லையோ முதலில் நம்முடைய குலதெய்வத்தை வணங்க வேண்டும் அப்படி வணங்கினால் மட்டுமே அனைத்து தெய்வத்தின் அருளையும் நாம் பெற முடியும். இந்நிலையில், குலதெய்வத்தின் மகிமை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
குலதெய்வத்தினை விட உயர்ந்த தெய்வம் இவ்வுலகில் எதுவும் இல்லை. இஷ்ட தெய்வம் எதுவாக இருந்தாலும் முதலில் குலதெய்வத்தை வழிபட்டாலே அந்த இஷ்ட தெய்வத்தின் அருள் நமக்கு கிட்டம் என்பது ஐதீகம். குலதெய்வம் நம்மை கண்ணின் இமை போல் பாதுகாப்பாகவும் காத்து நிற்கும் ஒரு தெய்வம். குறிப்பாக குலதெய்வத்தின் படத்தினை வீட்டில் வைத்து வணங்கி வருவது மிகவும் அந்த குடும்பத்திற்கு நல்லது விளைவிக்கும். குலதெய்வ அனுக்கிரகம் இல்லையேல் எந்த தெய்வ அனுகிரகமும் இல்லை. அரசனை ஆண்டியாக்குவதும், ஆண்டியை அரசனாகுவதும் குலதெய்வம் தான். இந்நிலையில் குலதெய்வத்திற்கும், மற்ற தெய்வத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன என்பதை பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம்.
குலதெய்வத்திற்கு உங்கள் வம்சாவளி தான் பிள்ளைகள். ஆனால், மற்ற தெய்வத்திற்கு எண்ணற்ற பிள்ளைகள். குலதெய்வத்தின் அருளால் நம் இன்னல்கள் அனைத்தும் சூரியனைக் கண்ட பனி போல் விலகி செல்லும். குலதெய்வ வழிபாட்டை ஒழுங்காக கடைபிடித்து வந்தால் நவகிரகங்களும் நமக்கு துணை நின்று நல்லது நடக்கும். ஒருபோதும் குலதெய்வம் வழிபாட்டை மட்டும் மறந்து விடாதீர்கள், ஏனென்றால் குலதெய்வ வழிபாட்டை மறப்பது என்பது தன் தாயை பட்டினி போடுவதற்கு சமமாகும்.