
தமிழ்நாடு மற்றும் மத்திய அரசு சார்பில் சாமானிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு வீட்டு வசதி இல்லாதவர்களுக்கு பல்வேறு நிதியுதவி வழங்கும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அந்தவகையில், தற்போது மத்திய அரசின் ‘பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா (PMAY -U 2.0)’ திட்டத்தின் நன்மைகள் குறித்து இந்த பதிவில் விரிவாக காண்போம். அதாவது, இத்திட்டத்தின் கீழ் புதிய வீடுகள் கட்ட நினைக்கும் கிராம மற்றும் நகர்ப்புறங்களில் வசிக்கும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய குடும்பங்களுக்கு ரூ. 2,50,000 நிதி உதவி வழங்கப்படுகிறது.
இதுதவிர, இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள நபர்களுக்கு ரூ. 35 லட்சம் வரை 4% வட்டி விகிதத்துடன் கடன் தொகையும் வழங்கப்படுகிறது. மேலும், கடந்த 20 ஆண்டுகளில் அரசாங்கத்தின் வேறு ஏதேனும் வீட்டு வசதி திட்டத்தின் மூலம் எந்த வித பலன்களையும் பெறாத ஆண்டு வருமானம் ரூ. 3 லட்சத்திற்கும் குறைவாக உள்ளவர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். மேலும், இத்திட்டம் குறித்த முழு தகவல்களையும் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க நினைப்பவர்கள் https://pmay-urban.gov.in/ என்ற அதிகாரபூர்வ இணையத்தளத்தை பார்வையிடவும்.