நடந்து முடிந்த 2024 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சியில் பாமக சார்பில் கடலூர் பாராளுமன்ற தொகுதியில் இயக்குனர் தங்கர் பச்சான் போட்டியிட்டு படுதோல்வி அடைந்துள்ளார்.
இருப்பினும் இயக்குனர் தங்கர் பச்சான் கடலூர் மாவட்ட தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் வாக்காளர்களை சந்தித்து அவர்களுக்கு நன்றியினை கூறி வருகிறார். அதன்படி அவர் திருநெல்வேலி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 50க்கும் மேற்பட்ட கிராமங்களில் மக்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்துள்ளார் .
அப்பொழுது அவர்கள் செய்தியாளர்களை சந்தித்து பேசி உள்ளார். அப்பொழுது அவர் கூறியது “மக்களை சந்தித்து நன்றி சொன்னால் மக்கள் எனக்கு ஆறுதல் கூறுகிறார்கள். என்னை பார்த்து கண்ணீர் விடுகிறார்கள். என் மக்கள் தான் தோற்றாலும் செய்ய வேண்டிய சேவையை தான் தொடர்ந்து செய்து கொண்டே இருப்பேன்.
40 தொகுதியையும் வென்ற திமுக கூட்டணி இனிமேலாவது மக்களுக்கு பயனுள்ளதாக செயல்களை செய்ய வேண்டும். கடந்த ஐந்து ஆண்டு வெளிநாட்டுக்கு மட்டுமே செய்தது திமுக கூட்டணி. பாஜக மீதான விரோத போக்கை கைவிட்டால் மட்டுமே தமிழகத்திற்கு நல்ல காலம் பிறக்கும்”, என கூறியுள்ளார்.