
மணிப்பூரில் பழங்குடி மக்களுக்கும் பெரும்பான்மை சமூகமான மேதி சமூகத்திற்கும் இடையே கடந்த சில வாரங்களாக இருந்து வந்த மோதல் அதிகரித்துள்ளது. இதனை அடுத்து மணிப்பூரில் நடைபெற்றுவரும் கலவரத்தில் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை கட்டுப்படுத்தாத மணிப்பூர் மாநில அரசை கண்டித்து மக்கள் நீதி மய்யம் போராட்டம் அறிவித்துள்ளது. இந்நிலையில் ஆகஸ்ட் 6 ஆம் தேதி சென்னை, கோவை, திருச்சி, மதுரை, நெல்லை, சேலம், காஞ்சிபுரம், விழுப்புரம் உள்ளிட்ட 8 இடங்களில் போராட்டம் நடைபெறுகிறது. இந்த போராட்டத்தில் கலந்துகொள்ள கட்சி நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார் பொது செயலாளர் அருணாச்சலம்.