மக்கள் விரும்பிய ஆட்சியைக் கொடுக்காவிட்டால் ஆட்சியைக் கலைத்து விடுவேன்..!! கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி எச்சரிக்கை..!!

ஆட்சியை கலைத்துவிடுவேன். முன்னாள் முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை.

மக்கள் விரும்பிய ஆட்சியைக் கொடுக்கா விட்டால் ஆட்சியைக் கலைத்துவிடுவேன் என கர்நாடக மாநில முதலமைச்சர் குமாரசாமி தெரிவித்துள்ளார். கர்நாடக மாநில முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி பெங்களூருவில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது மாநிலத்தில் பல்வேறு நெருக்கடிகளுக்கு மத்தியில் கூட்டணி ஆட்சியில் நான் முதல்-மந்திரியாக பதவி ஏற்றேன். எந்த நெருக்கடியாக இருந்தாலும் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதிலும் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தற்கும் முக்கியத்துவம் கொடுத்தேன்.

கர்நாடக சட்டசபைக்கு இன்னும் சில மாதங்களில் தேர்தல் நடைபெற உள்ளது.இந்த தேர்தலில் தனிப்பெரும் பான்மை பலத்துடன் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க ஜனதாதளம் எஸ் கட்சி போராடி வருகிறது. எங்கள் கட்சிக்கு மக்கள் ஒரு முறை வாய்ப்பு அளிக்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் மக்கள் விரும்பியபடி ஆட்சி செய்வோம். மக்கள் விரும்பியபடி ஆட்சி கொடுக்கா விட்டால் ஜனதாதளம் எஸ் கட்சியை கலைத்து விடுவேன். ஜனதாதளம் எஸ் கட்சி 4 மாவட்டங்களுக்கு மட்டுமே பிரபலமானது குமாரசாமி செல்லும் பகுதிகளில் மக்கள் கூடுவார்கள் ஆனால் மக்கள் ஓட்டளிக்க மாட்டார்கள் என்ற கருத்து உள்ளது.

நடைபெற உள்ள சட்டசபை தேர்தலில் இது மாற வேண்டும்.கட்சியை விட்டு சென்றவர்கள் பற்றி கவலைப்பட போவதில்லை. எந்த தொகுதியில் யார் சென்றாலும் சாதாரண தொண்டரை வேட்பாளராக நிறுத்தி வெற்றி பெறும் சக்தி கட்சிக்கு உள்ளது. சான்ட்ரோ ரவி கைது செய்யப்பட்டு இருப்பதாக பா.ஜனதா அரசு கூறி வருகிறது. எனக்கு இருக்கும் தகவல்படி அவர் உடுப்பியில் இருந்து கேரளா அங்கிருந்து புனேக்கு சென்று இருந்தார். ஆட்சியை கலைத்து விடுவேன்.முன்னாள் முதல்வர் குமாரசாமி எச்சரிக்கை.

3 நாட்களுக்கு முன்பாகவே சான்ட்ரோ ரவி கைது செய்யப்பட்டு உள்ளார். அவரிடம் இருந்த சாட்சிகள் அனைத்தையும் போலீசார் அழித்து விட்டனர். சான்ட்ரோ ரவி கைதாகும் முன்பாக போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா எதற்காக குஜராத் சென்றார். சான்ட்ரோ ரவியை குஜராத்தில் வைத்து கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன. அங்கு பா.ஜனதா அரசு உள்ளது. அவர்களால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். சாட்சி ஆதாரங்களை அழித்த பின்பு சான்ட்ரோ ரவி கைதாகி எந்த பிரயோஜனமும் இல்லை என்று தெரிவித்து உள்ளார்.

Read Previous

நாடு முழுவதும் இன்று மாட்டுப் பொங்கல் உற்சாகமாக கொண்டாட்டம்..!!

Read Next

பாலமேடு ஜல்லிக்கட்டில் ஆளுமாறாட்டம் செய்த 8 மாடுபிடி வீரர்கள் தகுதி நீக்கம்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular