
- மசாலா பிரட் பீசா செய்முறை
தேவையான பொருட்கள் :
* ப்ரட் ஸ்லைஸ் 15
* குடை மிளகாய் 3
* வெங்காயம் 2
* தக்காளி 2
* தக்காளி சாஸ் 12 டீஸ்பூன்
* துருவிய சீஸ் 12 டேபிள் ஸ்பூன்
* நெய் 6 டீஸ்பூன்
* உப்பு 1 டீ ஸ்பூன்
* கொத்தமல்லி இலை 2 டீஸ்பூன்
* எண்ணெய் தேவையான அளவு
* ஓமம் 1ஃ2 டீஸ்பூன்
* சீரகம் 1ஃ2 டீஸ்பூன்
* சோம்பு 1ஃ2 டீஸ்பூன்
செய்முறை :
மசாலா பிரட் பீசா செய்வதற்கு முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றாமல், அதில் ஓமம், சோம்பு, சீரகம் ஆகியவற்றை போட்டு வாசனை வரும் வரை வறுத்துப் பொடித்துக் கொள்ளவும்.
பிறகு குடை மிளகாயில் இருக்கும் விதைகளை நீக்கி பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பிறகு வெங்காயம், தக்காளி ஆகியவற்றை பொடிப்பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
பிறகு அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி, அதில் பொடித்த தூள், வெங்காயம் ஆகியவற்றை போட்டு வதக்கி, அதனுடன் குடைமிளகாயை சேர்க்கவும். நன்றாக வதங்கியதும், அதில் உப்பு, தக்காளியைச் சேர்த்து இறக்கவும். பிறகு இந்தக் கலவையை பத்து பாகங்களாக பிரிக்கவும்.
பிரட் துண்டுகளை ஒரு தட்டில் வைத்து, வதக்கிய கலவையை ஒவ்வொரு துண்டிலும் பரவலாக பரப்பவும். பிறகு அதன் மேல் ஒரு டீஸ்பூன் தக்காளி சாஸும், ஒரு டீ ஸ்பூன் சீஸ் துருவலும் பரப்பவும். இப்படியே எல்லா துண்டங்களையும் தயார் செய்யவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடாக்கவும்.
சூடானதும் அடுப்பை சிம்மில் வைத்து நெய்யை ஊற்றி, இரண்டு ப்ரட் துண்டுகளை அடுக்கி, இரண்டு நிமிடம் கழித்து எடுக்கவும். இப்போது ப்ரட் துண்டின் அடிப்பாகம் சிவந்தும், மேலே உள்ள சீஸ் உருகியும் இருக்க வேண்டும். இப்படியே எல்லாத் துண்டுகளையும் வறுத்து எடுக்கவும். சுவையான மசாலா பிரட் பீசா ரெடி.