மச்சா 160 ல போடா.. நொடியில் பறிபோன 2 உயிர்..!! லைவ் வீடியோவில் அதிர்ச்சி காட்சிகள்..!!

ரீல்ஸ் மோகம் இன்னும் எத்தனை உயிர்களை காவு வாங்கப்போகிறது என்பதை தெரியாமல் பிள்ளைகளின் செயல்பாடுகளை ஊக்குவிக்கும் பெற்றோருக்கு ரீல்ஸ் மோகத்தால் நடைபெறும் ஒவ்வொரு விபத்தும் எச்சரிக்கை பாடம் என்பது குறிப்பிடத்தக்கது.

குஜராத் மாநிலத்தில் உள்ள அகமதாபாத் பகதியை சார்ந்த 22 வயது முதல் 27 வயதுடைய 5 பேர் கொண்ட இளைஞர்கள் குழு சம்பவத்தன்று அகமதாபாத் நகரில் இருந்து மும்பைக்கு தங்களின் மாருதி சுசுகி காரில் பயணம் செய்துள்ளனர். இவர்கள் அகமதாபாத் மும்பை தேசிய நெடுஞ்சாலையில் தங்களின் பயணத்தை தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் இவர்கள் தங்களின் பயணத்தின் போது 140- 160 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்த நிலையில் இவர்களின் வாகனம் அகமதாபாத் நகரில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்ச் பகுதியில் விபத்து ஏற்பட்டது. முன்னாள் சென்று கொண்டிருந்த வாகனங்களை அதிவேகத்திலேயே முந்தி செல்ல முற்பட்டபோது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. கார் தனது கட்டுப்பாட்ட இழந்து மரத்தின் மீது மோதி நொறுங்கியது.

கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில் வாகனத்தில் பயணம் செய்த மெஹபூபாய் ஷேக் மற்றும் சிரக்குமார் கே படேல் ஆகியோர் உயிர் இழந்தனர். இவர்கள் பயணத்தின் போது காரில் பாடல்களை ஒழிக்க விட்டு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் லைவ் வீடியோ பதிவிட்டவாறு பயணம் செய்துள்ளனர். இவர்களின் விபத்திற்குள்ளான போது லைவ் வீடியோவில் கார் விபத்துக்கு உள்ளான சத்தம் மட்டுமே பதிவாகியுள்ளது.

Read Previous

கனமழை – மேற்கூரை இடிந்து விழுந்து இளைஞர் பலி..!! பெரும் சோகம்..!!

Read Next

மன அழுத்தமா?.. மனதை அழுத்தும்போது என்ன விளைவு உண்டாகும்?.. நீங்க என்ன செய்ய வேண்டும்?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular