
ஏன் மஞ்சள் கயிற்றில் தாலி கட்டுகிறார்கள் தெரியுமா..?? அதற்குப் பின்னால் உள்ள ரகசியம் இதுதான்..!!
நம் முன்னோர்களின் காலகட்டத்தில் இருந்து எவ்வளவு பெரிய வசதியானவர்களாக இருந்தாலும் சரி ஏழைகளாக இருந்தாலும் சரி மஞ்சள் கயிற்றில் தான் தாலி கட்டுவார்கள். அது ஏன் என்று நம்மில் பலருக்கும் தெரியாது. முன்னோர்கள் செய்த ஒவ்வொரு செயலுக்குப் பின்னும் ஒரு அறிவியல் இருக்கும் என்பது சமீபகாலமாகத்தான் தெரிய வருகிறது. அந்த வகையில் மஞ்சள் கயிற்றில் ஏன் தாலி கட்டுகிறார்கள் என்பதை பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
மஞ்சள் பொதுவாகவே மஞ்சள் என்றால் ஒரு சிறந்த கிருமி நாசினியாக செயல்படுகிறது. கொரோனா காலகட்டத்தில் கூட அனைவரும் குளிக்கும் நீரில் மஞ்சள் சேர்த்து பின்னர் குளித்தார்கள். ஏனென்றால் இது ஒரு மிகச்சிறந்த கிருமி நாசினி. அந்த வகையில் பெண்கள் மஞ்சள் தாலி அணியும் போது தினமும் குளிக்கும் போது மஞ்சள் கயிற்றுக்கு மஞ்சளை பூசி குளிப்பதை வழக்கமாக வைத்திருப்பார்கள். அவ்வாறு மஞ்சள் பூசி குளிக்கும் போது மஞ்சள் நீரில் கலந்து நமது உடலில் இருக்கும் கிருமிகளை அழிக்கும். நம்மளை பல்வேறு நோய்த்தொற்றுகளில் இருந்தும் பாதுகாக்கும். இந்த காரணங்களுக்காகத்தான் மஞ்சள் கயிற்றில் தாலி கட்டுகின்றனர்.