மஞ்சள் கலந்த பாலை குடித்தால் உடலுக்கு எவ்வளவு நன்மைகளா? வாங்க தெரிஞ்சுக்கலாம்.!!

பொதுவாக நாம் உணவில் மஞ்சள் சேர்ப்பது பலவித நன்மைகளை கொடுக்கின்றது. அந்த வகையில் மஞ்சளில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் கிருமிகளை அழிக்கும் சக்தி உள்ளது என்பதால் பல்வேறு வகையில் நாம் மஞ்சளை பயன்படுத்தி வருகின்றோம். எனவே மஞ்சள் கலந்த பாலை குடிப்பதால் உடலுக்கு என்னென்ன நன்மைகள் கிடைக்கும் என்பது குறித்து இந்த செய்திதொகுப்பில் காணலாம்.

மஞ்சளில் அதிக அளவில் ஆண்டி ஆக்சிடென்ட்கள் நிறைந்து காணப்படுகிறது. இது செல்களை சேதத்தில் இருந்து பாதுகாத்து நோய் தொற்றுகளை எதிர்த்து போராடுகின்றது. மஞ்சள் கலந்த பாலை குடிப்பதால் நினைவாற்றல் அதிகரிக்க உதவுகிறது. மேலும் அலசைமர் மற்றும் பார்க்கின்சன் நோயிலிருந்து மூளையில்  செயல்பாடு குறைவதை தடுக்கிறது.

மஞ்சள், இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை கலந்த பால் குடிப்பதன் மூலம் வலுவான அலர்ச்சியை எதிர்த்து செயல்படுகின்றது. இவை வீக்கம் மற்றும் மூட்டு வலியை குறைக்கின்றது. மஞ்சள் கலந்த பால் ரத்தத்தில் சர்க்கரை அளவை குறைக்க உதவுகின்றது. இதய நோய்களிலிருந்து பாதுகாக்கும் தன்மைகளை கொண்டுள்ளது.

மஞ்சள் , இஞ்சி மற்றும் இலவங்கப்பட்டை கலந்த பால் குடிப்பதால் புற்றுநோய்க்கு எதிராக போராடும் தன்மை கொண்டது. மஞ்சள் கலந்த பாலில் உள்ள ஆக்சிஜன் ஏற்ற மற்றும் அலர்ச்சி எதிர்ப்பு பண்புகள் நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதுகாக்கிறது. மேலும் சளி, இருமல் போன்ற தொல்லைகளில் இருந்து நம்மை காக்கிறது. மஞ்சள் கலந்த பாலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அதிக அளவில் நிறைந்து இருப்பதால் எலும்பு நோய்களின் அபாயத்தை குறைக்கின்றது.

Read Previous

கொழுப்பை குறைத்து ரத்தத்தை சுத்தப்படுத்த வேண்டுமா.? இந்த காயை சாப்பிட்டால் போதும்.!!

Read Next

டெங்கு காய்ச்சலை இயற்கை முறையில் தடுக்கும் எளிய முறைகள் இதோ.!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular