
மட்டன் சுக்கா இப்படி செஞ்சு பாருங்க..!! வீட்ல இருக்க எல்லாரும் விரும்பி சாப்பிடுவாங்க..!!
கால் கிலோ மட்டனை சிறிய துண்டுகளாக நறுக்கி நன்கு அலசி குக்கரில் போட்டு கால் டீஸ்பூன் மஞ்சள்தூள் அரை டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து சிறிதளவு உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு ஐந்து விசில் விட்டு நன்கு வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். 150 கிராம் சின்ன வெங்காயத்தை சின்ன சின்னதாக நறுக்கவும். மற்றும் 10 பல் பூண்டை சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக்கொள்ள வேண்டும்.
அடுப்பைப் பற்ற வைத்து ஒரு பாத்திரத்தில் நாலு டீஸ்பூன் எண்ணெய் விட்டு எண்ணெய் சூடானவுடன் சிறிதளவு கருவேப்பிலை நாலு கிள்ளிய காய்ந்த மிளகாய் தாளித்து வெங்காயம் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும். பிறகு ஒரு டீஸ்பூன் மிளகாய்த்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைத்த மட்டனையும் மட்டன் வெந்த தண்ணீரையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். இதில் இரண்டு சிட்டிகை கரம் மசாலாத்தூள் போட்டு மட்டனில் உள்ள தண்ணீர் மற்றும் வரை நன்கு சுருள சுருள வதக்க வேண்டும். பின்பு சிறிதளவு கொத்தமல்லி இலை தூவி இறக்கினால் மட்டன் சுக்கா ரெடி. கண்டிப்பா உங்க வீட்டிலயும் இத செஞ்சு பாருங்க.