கருவாட்டுக் குழம்பு பிடிக்காத நபர்கள் இருக்க மாட்டார்கள். சிலர் இதிலிருந்து வரும் வாசனையின் காரணமாக வேண்டாம் என நினைத்தாலும் முறைப்படி சமைக்கும் பொழுது அதிலிருந்து எந்த கெட்ட வாசனை இல்லாமல் குழம்பு ஊரே மணக்கும் அளவிற்கு வாசனையாக இருக்கும். இந்த ஒரு குழம்பு போதும் சாதம் இட்லி, தோசை என அனைத்திற்கும் சமாளித்து விடலாம். மேலும் இந்த குழம்பு வைத்த அந்த நாளை விட அடுத்த நாள் சாப்பிடும் பொழுது சுவை கூடுதலாகவும் மீண்டும் ஒரு சாப்பிடும் அளவிற்கு அமிர்தமாகவும் இருக்கும். வாங்கினாவில் எச்சில் ஊறும் நெத்திலி கருவாட்டு குழம்பு செய்வதற்கான ரெசிபியை இந்த தொகுப்பில் பார்க்கலாம்…
ஒரு அகலமான மண் பாத்திரத்தில் இரண்டு தேக்கரண்டி நல்லெண்ணெய் சேர்த்துக்கொள்ள வேண்டும். ஒரு தேக்கரண்டி கடுகு, ஒரு தேக்கரண்டி வெந்தயம் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும். அடுத்ததாக ஒரு தேக்கரண்டி சேர்த்துக் கொள்ள வேண்டும். கடுகு வெடிப்பது போல உளுந்து வெடிக்கக் கூடாது.
அதற்குள் பத்து முதல் 15 சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு சேர்த்து வதக்க வேண்டும். வெங்காயம் வதங்கும் நேரத்தில் இரண்டு பச்சை மிளகாய், கைப்பிடி அளவு கருவேப்பிலை சேர்த்து வதக்கி கொள்ள வேண்டும். அடுத்ததாக நான்கு அல்லது ஆறாக கீரியனுக்கு கத்திரிக்காய், ஒரு முருங்கைக்காய், தோல் நீக்கி சுத்தம் செய்து கொடியாக நறுக்கிய ஒரு உருளைக்கிழங்கு, கைப்பிடி அளவு ஊறவைத்த மொச்சை பயிறு சேர்த்து நன்கு எண்ணெயோடு வதக்க வேண்டும்.
காய்கறிகள் பாதியாக வெந்ததும் பொடியாக நறுக்கிய இரண்டு தக்காளி பழம் சேர்த்து வதக்க வேண்டும். தக்காளி பழம் நன்கு மசிந்ததும் எலுமிச்சை பழ அளவு ஊறவைத்த புளி கரைசல் கெட்டியாக சேர்த்துக் கொள்ளலாம்.
புளி தண்ணீர் சேர்த்து காய்கறிகள் ஒரு கொதி வந்ததும் மசாலா பொருட்களை சேர்த்துக் கொள்ளலாம். ஒரு தேக்கரண்டி தனி மிளகாய் தூள், ஒன்றரை தேக்கரண்டி மல்லித்தூள், அரை தேக்கரண்டி மஞ்சள்தூள், இரண்டு தேக்கரண்டி குழம்பு மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து கொடுத்து கொதிக்க விட வேண்டும். இந்த நேரத்தில் குழம்பிற்கு தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளலாம்.
மசாலா பொருட்களிலிருந்து பச்சை வாசனை சென்று குழம்பு நன்கு கொதித்து வரும் நேரத்தில் நாம் கழிவு சுத்தம் செய்து வைத்திருக்கும் நெத்திலி மீன் கருவாடை சேர்த்துக் கொள்ளலாம். மீண்டும் மூடி போட்டு ஐந்து நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால் நெத்திலி மீன் கருவாட்டு குழம்பு தயார். கருவாடு சேர்க்கும் பொழுது தேவைப்பட்டால் முட்டை சேர்த்து மூடி போட்டு வேக வைத்துக் கொள்ளலாம்.
இந்த முறையில் சமைக்கும் பொழுது குழம்பு தயாராகும் நேரத்திலேயே முட்டையின் தயாராகி விடும். சூடான சாதத்தில் இந்த நெத்திலி மீன் கருவாட்டுக் குழம்பு ஊற்றி வேகவைத்த முட்டை வைத்து சாப்பிடும் பொழுது அவ்வளவு அமிர்தமாக இருக்கும். மேலும் இந்த கருவாட்டு குழம்பு இரண்டு நாள் வைத்து சாப்பிட்டாலும் கெட்டுப் போகாது மேலும் சுவை அதிகரித்து சிறப்பாக இருக்கும்.