மணத்தக்காளி கீரை பலரும் சாப்பிட்டு வருவார்கள் மணத்தக்காளி கீரை சாப்பிடுவதனால் வயிற்றுப்புண் மற்றும் வாயில் ஏற்படும் புண் மிக விரைவில் சரியாகும் என்று பலரும் சாப்பிடுவது வழக்கம், அதேபோல் மணத்தக்காளி கீரையை ஜூஸாக அடித்து வெறும் வயிற்றில் குடிப்பதனால் நமது உடலில் உள்ள கிருமிகள் அனைத்தும் அழிந்து உடலில் உள்ள உறுப்புகளுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும், அதே போல் மணத்தக்காளி சாப்பிடுவதனால் நமது உடலுக்கு பல நன்மைகள்..
அயராது உழைக்கும் உடலின் உறுப்புகளுக்கு மணத்தக்காளி என்பது மிகவும் அவசியமே, அயராது உழைக்கும் உள் உறுப்புகளை அமைதிப்படுத்துவதற்கும் சாந்தப்படுத்துவதற்கும் இயற்கையின் கூலிங் ஏஜெண்டாக மணத்தக்காளி உள்ளது, வாய் முதல் ஆசனவாய் வரை வெப்பம் காரணமாக எவ்விதமான பாதிப்புகளும் ஏற்படாத வகையில் மணத்தக்காளி உடல் உறுப்புகளை பார்த்துக்கொள்கிறது, மேலும் மணத்தக்காளி கீரையில் எவ்வளவு நன்மைகள் இருக்கிறதோ அதேபோல் மணத்தக்காளியிலும் உடலுக்கு தேவையான நன்மைகள் கிடைக்கிறது வாரத்திற்கு மூன்று நாட்கள் மணத்தக்காளி மற்றும் மணத்தக்காளி கீரை சாப்பிடுவதால் நமது உடலுக்கு தேவையான அனைத்து ஆரோக்கியங்களும் கிடைத்து விடுகிறது..!!




