
மணத்தக்காளி வற்றல் குழம்பு செய்முறை
* தேங்காய்அரை கப்
* மணத்தக்காளி வற்றல்அரை கப்
* உப்புதேவைக்கேற்ப
* மஞ்சள் தூள்1 டீஸ்பூன்
* வெல்லம்3 டீஸ்பூன் (விரும்பினால்)
* காய்ந்த மிளகாய்6
* பெருங்காயம்1 சிட்டிகை
* தண்ணீர் தேவைக்கேற்ப
* மிளகாய்த் தூள்1 டேபிள் ஸ்புன்
தாளிக்க :
* நல்லெண்ணை – தேவைக்கேற்ப
* கடுகு – அரை டீஸ்பூன்
* உளுந்து – அரை டீஸ்பூன்
* வெந்தயம் – அரை டீஸ்பூன்
* கடலை பருப்பு – அரை டீஸ்பூன்
* சீரகம் – அரை டீஸ்பூன்
* கறிவேப்பிலை – ஒரு கொத்து
செய்முறை :
புளியை 2, 3 தடவைகளாக நன்றாகக் கரைத்துக் கொள்ளவும்.தேங்காயை சிறிது தண்ணீர் சேர்த்து, விழுது மாதிரி அரைத்துக் கொள்ளவும்.அடுப்பில் வாணலியை வைத்து, 2 டேபிள் ஸ்பு+ன் எண்ணையைச் சூடாக்கி, உளுந்து, கடுகு, வெந்தயம், காய்ந்த மிளகாய், துவரம் பருப்பு, பெருங்காயம், சீரகத்தைத் தாளித்துக் கொள்ளவும்.
பின்னர் மிளகாய்ப் பொடி, கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இவற்றுடன் கரைத்துவைத்துள்ள புளித்தண்ணீர், உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்கவிடவும்.
மற்றொரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணையில் மணத்தக்காளி வற்றலைச் சிவக்க வறுத்து, அத்துடன் அரைத்து வைத்துள்ள தேங்காய் விழுதைச் சேர்த்து நன்றாக வதக்கவும்.வதக்கிய கலவையை கொதிக்கவிடப்பட்டுள்ளள புளித் தண்ணீரில் சேர்த்து, மேலும் 5 நிமிடங்கள் கொதிக்க வைத்து இறக்கினால், மணத்தக்காளி வற்றல் குழம்பு ரெடி.
இதனுடன் சாப்பிட உகந்த உணவுகள் : இந்த மணத்தக்காளி வற்றல் குழம்பை சாதம் மற்றும் தோசையுடன் சேர்த்து சாப்பிட்டால், சுவையாக இருக்கும்.