மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது..வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்லுவது ஏன்..??

 

 

மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது வலது காலை எடுத்து வைத்து வரச்சொல்வது இன்றளவும் வழக்கத்தில் உள்ளதை நம்மால் காண முடிகிறது.

இதற்கு அறிவியல் ரீதியாக பல காரணங்கள் உள்ளன.

இதற்கான விளக்கத்தினை கவிஞர் கண்ணதாசன் இயற்றியுள்ள அர்த்தமுள்ள இந்துமதம் என்னும் நூலின் மங்கள வழக்குகள் என்ற பகுதியின் வாயிலாக அறிந்து கொள்வோம் வாருங்கள்.

மனோதத்துவ மருத்துவம்…

‘மங்கலம்- அமங்கலம்’ என்று இந்துக்கள் பிரித்தது மூட நம்பிக்கையால் அல்ல.

அது மனோதத்துவ மருத்துவம். சந்தோஷச் செய்திகள், வெற்றிச் செய்திகள் கேட்கும்போது, உன் உடல் எவ்வளவு புல்லரிக்கிறது.

வாழ்த்துக்கள் ஒரு மனிதனின் காதில் விழுந்து கொண்டே இருந்தால், அவனது ஆயுளும் விருத்தியாகிறது; ஆனந்தமும் அதிகரிக்கிறது. எனவே மங்கல வழக்குகள் அதற்காகவே ஏற்பட்டன.

*வலப்புறம் ஏன்?…*

மணமக்கள் வீட்டுக்குள் நுழையும்போது, ஏன் வலது காலை எடுத்து வைத்து வரச் சொல்லுகிறார்கள்.

மணவறையைச் சுற்றி ஏன் வலம் வருகிறார்கள்?

ஊர்வலம் வருவது என்று ஏன் கூறுகிறார்கள்?

எல்லாமே வலப்புறம் போவதன் நோக்கம் என்ன?

பூமியே வலப்புறமாகச் சுழல்கிறது என்பதுதான் காரணம் ஆகும். மனிதனின் இரண்டு கால்களில்- கைகளில், இடது கால் கைகளைவிட, வலது கால் கைகள் பலம் வாய்ந்தவை.

‘சக்தியோடு வாழ’ நிரந்தரமாக எதிலும் ‘வலப்புறமாக வருவது நன்று’ என இந்துக்கள் நம்பினார்கள்; நம்புகிறார்கள். ‘வலம்’ என்பது ‘நாம் வலிமையடைவோம்’ என்றும் பொருள் தருகிறது.

‘வலியோம், வல்லோம், வல்லம், வலம்’. இந்த நான்கு வார்த்தைகளும் ஒரே பொருள் உடையவை.தனது வலிமையின் மீது நம்பிக்கை வைத்து வாழ்வதற்கே வலது காலை முதலில் எடுத்து வைக்கச் அறிவுறுத்தினார்கள்.

 

Read Previous

பேராசை பெரு நஷ்டம் என்பதற்கு இந்த கதை நல்ல உதாரணம்..!! படித்ததில் பிடித்தது..!!

Read Next

கண்டிப்பாக இந்த சமையல் ரகசியங்களை எல்லாம் தெரிந்து கொள்ளுங்கள் பெண்களே..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular