• September 29, 2023

மணவாளக்குறிச்சி அருகே முதியவர் தற்கொலை..!!

கன்னியாகுமாரி மாவட்டம் மணவாளக்குறிச்சி அருகே பரப்பற்று பகுதியைச் சேர்ந்தவர் முத்து நாடார்(68). இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. மேலும் குடித்துவிட்டு வேலைக்கு செல்லாமல் இருந்து வந்துள்ளார். சம்பவத்தன்று இவரது மனைவி அன்னக்கிளி முத்துநாடாரிடம் வேலைக்கு செல்லுமாறு கூறி அவரை கண்டித்துள்ளார். உடனடியாக வெளியே சென்ற முத்து நாடார் மதியம் வீட்டுக்கு திரும்பி வந்துள்ளார். பின்னர் அறைக்கு சென்று கதவை பூட்டியவர் நீண்ட நேரம் ஆகியும் வெளியே வரவில்லை. சந்தேகமடைந்த உறவினர்கள் கதவை தட்டி அழைத்தும் உள்ள எந்த வித சலனமும் இல்லை. பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது முத்து நாடார் விஷம் குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார். உடனடியாக அவரை மீட்டு நெய்யூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி முத்து நாடார் பரிதாபமாக இறந்து போனார். இச்சம்பவம் குறித்து மண்டைக்காடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Previous

அரை நிர்வாணத்துடன் விவசாயிகள் போராட்டம்..!!

Read Next

தந்தையை தாக்கிய மகன் கைது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular