
மணிப்பூர் பாதுகாப்பு படையுடனான மோதலில் குகி ஆயுத குழுவை சார்ந்த 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது..
வடகிழக்கு மாநிலங்களான மணிப்பூரில் கடந்த ஆண்டு மே மாதம் குக்கி மெய்தி இன மக்களுக்கிடையே கலவரம் எழுந்துள்ளது, இதில் சுமார் 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர், மேலும் ஆயிரக்கணக்கானோர் வீடுகளை விட்டு வெளியேறி நிவாரண முகாம்களில் குடியேறினர், மணிப்பூரில் தொடர்ந்து ட்ரோன்கள், சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரம்பிய ராக்கெட் உள்ளிட்டவற்றால் ஆயுதமேந்திய குழுக்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர், இதனிடையே வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் வகையில் அங்கு பல இடங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது, இணைய சேவையும் தடை செய்யப்பட்டது, இதனால் சில மாதங்களாக மணிப்பூரில் அமைதியான சூழல் நிலவியுள்ளது. ஆனாலும் முழுமையாக மணிப்பூரில் அமைதி திரும்பவில்லை, இந்த நிலையில் சமீப நாட்களாக மணிப்பூரில் மீண்டும் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன, இரண்டு தினங்களுக்கு முன்பு மணிப்பூரில் உள்ள கிராமத்தில் பெண் ஒருவர் நிர்வாணமாக எரித்து கொல்லப்பட்ட சம்பவம் மேலும் பதற்றத்தை அதிகரித்துள்ளது, இந்த நிலையில் மணிப்பூர் மாநிலம் ஜரிபம் பகுதியில் பாதுகாப்பு படையுடன் நடந்த மோதலில் குகி இனத்தை சேர்ந்த 11 பேர் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது, இந்த தாக்குதலில் சிஆர்பிஎஃப் வீரர் இருவர் படுகாயம் அடைந்துள்ளார், மேலும் ஒருவர் மிகவும் மோசமான நிலையில் தீவிர சிகிச்சையில் சேர்க்கப்பட்டுள்ளார் என்று தகவல் கிடைத்துள்ளது..!!