மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து கிறிஸ்துவ அமைப்பு சார்பில் அமைதி ஊர்வலம்..!!

மணிப்பூர் சம்பவத்தை கண்டித்து புள்ளம்பாடியில் கிறிஸ்துவ அமைப்பு சார்பில் அமைதி ஊர்வலம் நடைபெற்றது.

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே உள்ள புள்ளம்பாடி வட்டார அளவிலான கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலயத்தில் இருந்து, மணிப்பூர் மாநிலத்தில் சிறுபான்மையினருக்கு எதிரான தாக்குதல் சம்பவத்தை கண்டித்து அமைதி ஊர்வலம் நடைபெற்றது. புள்ளம்பாடி மறைவட்ட முதன்மை குரு சூசை மாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இந்த ஊர்வலத்தில் சகாயமாதா மருத்துவமனை இயக்குனர் அல்போன்ஸ், உதவி பங்கு தந்தை அந்தோணிராஜ், ஜோன்ஸ் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள், அருட்சகோதரிகள், கிறிஸ்தவ மக்கள் கையில் பதாகைகளை ஏந்தி திரளாக கலந்து கொண்டனர். இந்த ஊர்வலம் புனித அன்னாள் ஆலயத்தில் தொடங்கி கடைவீதி, பஸ் நிலையம், சகாயமாதா பஸ் நிலையம் வழியாக மீண்டும் ஆலயம் வந்தடைந்தது.

Read Previous

பைக் மீது மினி பஸ் மோதிய விபத்து..!!

Read Next

வழிநெடுக அரசுப்பள்ளி..! ” பாட்டு பாடிய தலைமை ஆசிரியர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular