மணிவண்ணன் மரணத்திற்கு மது காரணமல்ல..!!

இயக்குநரும், நடிகருமான மணிவண்ணன் 2013ஆம் ஆண்டு ஜுன் 15ஆம் தேதி இறந்தார். மதுப்பழக்கத்தால்தான் அவர் இறந்தார் என்று தகவல்கள் அப்போது பரவியிருந்தது. ஆனால் மணிவண்ணன் இறப்பதற்கு பல மாதங்களுக்கு முன்பே குடிப்பதை நிறுத்திவிட்டதாக அவரது சகோதரி கூறியிருக்கிறார். தாய் மரணமடைந்த சில நாட்களிலேயே மனைவிக்கும் புற்றுநோய் ஏற்பட்டதால் மணிவண்ணன் மிகுந்த மனவேதனையில் இருந்ததாகவும், இறப்பதற்கு 2 மாதங்களுக்கு முன் கீழே விழுந்ததும் அவர் உடல்நிலை மோசமடையக் காரணமானது எனவும் சகோதரி கூறியுள்ளார். முன்னதாக மலையாள நடிகர் கலாபவன் மணி, அளவுக்கு அதிகமாக பீர் குடித்ததால்தான் உயிரிழந்தார் என கேரள விசாரணை அதிகாரி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

Read Previous

அண்ணாமலை பல்கலை., 56 பேராசிரியர்கள் பணி நீக்கம்..!!

Read Next

சூரியின் ‘கொட்டுக்காளி’ – புகைப்படங்கள் வைரல்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular