
மண்டையைப் பிளக்கும் தலைவலியை ஐந்து நிமிடத்தில் போக்க..
இன்றைய சூழ்நிலையில் தலைவலி என்பது மிகவும் சாதாரணமான ஒன்றாகிவிட்டது. தொடர்ந்து டிவி, செல்போன், கணினியை பார்த்துக்கொண்டு இருப்பதால் கூட தலைவலி ஏற்படுகிறது. தலையின் ஒரு பகுதி மட்டும் வலி ஏற்படுவதை ஒற்றைத் தலைவலி என்கிறார்கள். வாந்தி, சூரிய ஒளியால் அதிகரிக்கக்கூடிய தலைவலியை ஒற்றைத் தலைவலி என்கிறார்கள். அதைப்போன்று சில பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் தலைவலி ஏற்படும். வெயில், வேலைப்பழு, மன அழுத்தம் போன்ற பல்வேறு காரணங்களினால் தலைவலி ஏற்படுகிறது. மூளைக்கு சரியான அளவு ஆக்சிஜன் சப்ளை இல்லை என்றாலும் தலைவலி வரும். தலைவலிக்கு மூச்சு பயிற்சி செய்யவேண்டும். தலைவலி வரும்போது மட்டும் மூக்கின் இடது துவாரத்தை மூடி வலது துவாரத்தை வெளிவிட வேண்டும். இது போன்று
5 நிமிடம் செய்து வந்தால் தலைவலி குணமாகும்.
ஒரு கைப்பிடி அளவு துளசி இலை, ஒரு ஸ்பூன் பட்டை பொடி, ஒரு ஸ்பூன் சுக்கு பொடி ஆகியவற்றை எடுத்து சிறிது தண்ணீர் கலந்து மிக்ஸியில் அரைத்து பேஸ்டாக எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதனை நெற்றியில் தடவி பத்து போன்று போட வேண்டும். இப்படி செய்து வந்தால் தலைவலி நீங்கும்.
மிளகு, பால் இரண்டையும் எடுத்துக் கொள்ளவும். மிளகைப் பொடியாக்கி அத்துடன் பால் கலந்து தலை உச்சியில் தேய்க்க வேண்டும். பிறகு அரை மணி நேரம் கழித்து குளிக்க வேண்டும். தலை வலி உடனே சரியாகிவிடும்.
2 வெற்றிலை, ஒரு துண்டு இஞ்சி, 2 வெங்காயம், 5 மிளகு ஆகியவற்றை எடுத்துக் கொள்ளவும். இவை அனைத்தையும் ஒரு அம்மியில் இடித்து சாறு எடுத்துக்கொள்ளவும். பின்னர் அந்த சாறை சூடாக்கி அதனை எடுத்து தலையில் தடவ வேண்டும். தலைவலி குறையும்.
இரண்டு மிளகு எடுத்து அதனை பொடியாக்கி தேங்காய் எண்ணையில் கலந்து நெற்றியில் பத்து போட்டு வந்தால் தலைவலி சரியாகும்.
மருதாணி இலையை எடுத்து அரைத்து நெற்றியில் பத்து போட்டு வந்தால் தலைவலி குறையும்.
இஞ்சியை அரைத்து தலைவலி இருக்கும் இடத்தில் தடவி வந்தால் தலைவலி குறையும்.
கிராம்பை எடுத்து அதனை நன்றாக அரைத்து நெற்றியில் பூசி வந்தால் தலைவலி குறையும்.
டீ அல்லது காப்பியில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்து குடித்து வந்தால் தலைவலி குறையும்.
உருளை கிழங்கை அரைத்து பத்து போட்டு விட்டால் தலைவலி குணமாகும்.
ஒரு டம்ளர் தண்ணீரில் ஒரு துண்டு இஞ்சியை அரைத்து போட்டு 10 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும். பின்னர் அதனை வடிகட்டி எலுமிச்சைச் சாறு சேர்த்து குடிக்க வேண்டும். சில நிமிடங்களில் தலைவலி குறையும்.
சுக்கை எடுத்து அதனை பொடியாக்கி தலையில் பத்து போட்டு வந்தால் தலைவலி குணமாகும்.