
சென்னை காசிமேடு பகுதியில் டாஸ்மாக் கடை செயல்படாத நேரத்தில், மதுபான பாட்டில்களை டோர் டெலிவரி செய்து வந்த இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். தொடர்ந்து, சம்பவ இடத்தை ஆய்வு செய்த போலீசார், குற்றவாளியை பிடிக்க, அவர்களே மதுபாட்டில்களை ஆர்டர் செய்துள்ளனர். அப்போது, போலீஸ் என தெரியாமல் பாட்டில்களை சப்ளை செய்ய வந்த இளைஞர் ஜோசப்பை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து, அவரிடம் இருந்து 20 மதுபாட்டில்களையும் மறிமுதல் செய்தனர்.