தமிழகத்தில் லஞ்சம் என்பது தற்பொழுது தலை ஓங்கி உள்ளது. அதிலும் பத்திரப்பதிவுத்துறையில் அதிக அளவில் லஞ்சம் வாங்கப்பட்டு வருகிறது. இது குறித்து ரகசிய தகவல் கிடைத்தது, அதன் அடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் சர்பதிவாளர் அலுவலகத்தில் நேற்று லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மதுராந்தகம் நகரில் சர்பதிவாளர் அலுவலகம் ஒன்று இயங்கி வருகிறது. இங்கு மதுராந்தகம் சார்பதிவு எல்லைக்கு உட்பட்ட கிராமங்களில் நடக்கும் பத்திரப்பதிவுகள், திருமணப்பதிவு போன்ற பல்வேறு விஷயங்கள் நடைபெறுவதால் மக்கள் தினமும் வந்து செல்வது வாடிக்கை.
இதனிடைய சர்பதிவாளர் அலுவலகத்தில் லஞ்சம் பெற்று முறைக்கேடாக பத்திரங்கள் பதிவு செய்யப்படுவதாக லஞ்ச ஒழிப்பு துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த ரகசிய தகவலின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். அலுவலகத்தில் இருக்கும் அதிகாரிகள் மற்றும் உதவியாளர் உட்பட அனைவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதனால் மதுராந்தகம் சர்பதிவாளர் அலுவலகத்தில் பரபரப்பான சூழல் ஏற்பட்டது. மாநில அளவில் பத்திரப்பதிவுத்துறையில் ஊழல் எடுப்பது தற்போது அபரி விதமாக வளர்ந்து கொண்டே செல்கிறது .அரசு ஊழியர்களும் நேரடியாக லஞ்சம் பெற்றால் மாட்டிக் கொள்வோம் என்பதை உணர்ந்து அவர்களிடம் ஆவணங்கள் கோர வருபவர்களிடம் விண்ணப்பத்தை நிராகரித்து இடைத்தரகர்கள் உதவியுடன் மறைமுகமாக இந்த லஞ்ச பணத்தை பெற்று லாபம் பார்த்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.