மதுரை மாவட்டத்தில் உள்ள சாத்தையார் அணை சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் புது பொலிவுடன் தயாராக உள்ளது.அதற்கான பணிகள் தற்பொழுது தொடங்கப்பட்டுள்ளன.
மதுரை பாலமேட்டிற்கு அருகே உள்ள சாத்தையார் அணை சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு காமராஜர் ஆட்சியில் கட்டப்பட்டதாகும். 29 அடி கொள்ளளவு கொண்ட இந்த சாத்தையார் அணை 2500 ஏக்கர் இடத்திற்கு பாசம் வசதியை ஏற்படுத்தி தருகின்றது. சிறுமலை, வயிற்றுமலை, செம்போத்துகரடு ஆகிய பல்வேறு பகுதிகளில் பெய்கின்ற மழை நீரை இந்த அணையில் நீர் ஆதாரமாய் அமைந்துள்ளது.
இந்நிலையில் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த சாத்தையார் அணை நிரம்பி வழிவதால் விவசாய பணிகள் தங்கு தடை இன்றி நடந்து வந்தது. இதனிடைய அதிமுக ஆட்சியில் ரூ.44 கோடி மதிப்பில் பொருத்தப்பட்ட ஷட்டர்கள் ஓட்டை விழுந்தது. அதனால் தண்ணீர் வீணாகி வருகின்றது. தற்பொழுது ரூ.1.10 கோடி மதிப்பில் ராசத ஷட்டர்கள் பொருத்தும் பணி பொதுப்பணித்துறை தொடங்கியுள்ளது .
ஷட்டர்களை தூக்குவதற்கு பயன்படுத்தும் ஜெனரேட்டர்களும் பழுதாகி இருப்பதால் அவற்றை புதிதாக மாற்றும் பணியும் தற்பொழுது நடைபெற்று வருகின்றது .மேலும் சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில் இந்த அணை பகுதியில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் மழைக்காலம் தொடங்குவதற்கு முன்பே இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என இப்பகுதி விவசாயிகள் மதுரை மாவட்ட நிர்வாகத்திற்கும், பொதுப்பணி துறைக்கும் வேண்டுகோள் வைத்துள்ளனர். இயற்கை எழில் சூழ்ந்த பகுதியாக திகழும் இந்த சாத்தையார் ஆணை மதுரை மாவட்டம் மக்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு இடமாக இருப்பது குறிப்பிடத்தக்கது.