கடந்த சில நாட்களாக பிரிட்ஜ் வெடித்து பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. அந்த வரிசையில், தற்போது 2 பெண்கள் பிரிட்ஜ் வெடித்து உயிரிழந்தாக தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. மதுரை மாவட்டம் பெரியார் பேருந்து நிலையம் அருகே தனியார் மகளிர் தங்கும் விடுதி ஒன்று உள்ளது. இந்த விடுதியில் சுமார் 50-க்கும் மேற்பட்ட பெண்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த நிலையில், இன்று (செப்டம்பர் 12) அதிகாலையில் திடீரென ஒரு அறையிலிருந்த பிரிட்ஜ் வெடித்து தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சிக்கி வாடிப்பட்டியில் தனியார்ப் பள்ளியில் பணிபுரிந்த பரிமளாசுந்தரி (50), மற்றொரு ஆசிரியை சரண்யா (22) ஆகியோர் உயிரிழந்தனர். இச்சம்பவம் பற்றி திடீர் நகர் காவல்துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.




