
மதுரை அருகே இரு தரப்பினருக்கு இடையே நடந்த மோதலில் எதிரொலியாக வீடு டீக்கடையில் பெட்ரோல் குண்டு வீசியதால் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சிவகங்கை மாவட்டம் கொந்தலை அருகே உள்ள கட்டமன்கோட்டையை சார்ந்தவர் மகாமுனி இவரது மகன் சவுந்தர பாண்டியன் இவர் நெடுங்குளம் பிரதான சாலை, சத்யா நகரில் டீக்கடை ஒன்று நடத்தி வருகிறார். சவுந்தரபாண்டியனுக்கும் அதே பகுதியை சார்ந்த மற்றொரு நபருக்கும் கடந்த 18ஆம் தேதி பொது பாதை தொடர்பாக சண்டை ஏற்பட்டது.
இதில் அந்த ஊரை சார்ந்த சப்பானி என்பவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இந்நிலையில் சப்பாணி வீட்டு வாசலில் நேற்று இரவு 9 மணி அளவில் இரண்டு பெட்ரோல் குண்டு வீசப்பட்டது. இதனை தொடர்ந்து சவுந்தரன் பாண்டியன் டீக்கடையின் முன்பாகவும் பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தினால் யாருக்கும் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படவில்லை.‘
இது குறித்து தகவல் அறிந்து வந்த சிலைமான் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் கட்டம்மன் கோட்டை கிழக்கு தெருவை சார்ந்த மனோகரன் மகன் மாதவன் (வயது 20) மற்றும் மூர்த்தி மகன் பிரசன்னா (வயது 25) ஆகி இருவரும் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது.
மேலும் விசாரணையில் இருவருக்கும் ஏற்கனவே நடந்த மோதலின் எதிரொலியாக இந்த சம்பவம் நடந்ததாக தெரிய வந்தது. இதனை தொடர்ந்து இரண்டு பேர் மீதும் வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் அவர்களை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.