மது அருந்தினால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடமுடியுமா?.. அது உண்மையா?.. இல்லையா?..

மது அருந்தினால் நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபடமுடியும் என்ற நம்பிக்கை மக்களிடம் பொதுவாகவே உள்ளது. அது உண்மையா? இல்லையா? வாங்க பாக்கலாம்!

மது அருந்துவதால் நம் மனதில் உள்ள மனா அழுத்தம் ஒருவிதத்தில் குறைகிறது என்பது உண்மைதான். மது அருந்துவதால் அது நமது மத்திய நரம்பு மண்டலத்தை பாதித்து நாம் என்ன செய்கின்றோம் என்பதையே மறக்கடித்து விடுகிறது.

மது அருந்திவிட்டு உடலுறவில் ஈடுபடும் போது நீண்ட நேரம் உடலுறவில் ஈடுபட்ட ஒரு உணர்வை அது குடுக்கும். ஆனால் அது முற்றிலும் பொய். மது அருந்துவதால் நமது கல்லீரல் மிகவும் பாதிப்படைகிறது.

நமது கல்லீரல்தான் ஆணுக்கு செக்ஸ் ஹார்மோன் சுரக்கும்போது அதைப் பக்குவப்படுத்தி உடலுக்கு அனுப்பி வைக்கிறது. கல்லீரல் பாதிப்படைவதால், ஹார்மோன் சுரப்பு சரியாக இருந்தாலும், உடலால் அதன் வேலைகளை சரிவர செய்ய முடியாமல் போகிறது.

இதனாலேயே ஆண்களின் விறைப்புத்தன்மை குறைகின்றது. விறைப்புத்தன்மை குறைவதால் உங்கள் மீது உள்ள ஆர்வம் உங்கள் வாழ்க்கை துணைக்கு முற்றிலும் குறைகிறது. மன அழுத்தத்தை போக்க பப்பில் ஆடுவது சரியா?

மது அருந்திவிட்டு ஆடினால் மன அழுத்தம் குறையாது. இரைச்சலான இசைக்கு ஆடுவதால், மன அழுத்தத்தை அதிகரிக்க சுரக்கும் அட்ரினலின் போன்ற ஹார்மோன்கள் மிகவும்  அதிகமாக சுரந்து உடல்நலனைக் முற்றிலும் கெடுக்கும்.

நீங்கள் அளவுக்கு மீறி மது அருந்துவதால் அதன் மூலம் ஏற்படும் போதை, நண்பர்களோடு கண்மண் தெரியாமல் டான்ஸ் ஆடுவதையும் சண்டை போடுவதையும் சகஜமாக்கிவிடும்.

நீங்கள் தொடர்ச்சியாக மது அருந்துவதால் உங்கள் வாயில் ஒருவிதாமா துர்நாற்றம் ஏற்பட்ட கூடும். இது  கணவனோ, மனைவியோ ஒருவருக்கொருவர் முத்தம் கொடுக்கும்போது துர்நாற்றம் அடிக்கும்… பார்ட்னர் மீது அருவெறுப்பு ஏற்படும்.

மது தாம்பத்திய வாழ்க்கையை மட்டும் பாதிப்பதில்லை. நம்மை அதற்கு அடிமையாக்கி, பொருளாதாரத்தையும் உடல் நலத்தையும் சேர்த்தே அழித்துவிடும். ஆமாம்… மது செயல்திறனை மட்டுமல்ல… செக்ஸ் மீதான ஆர்வத்தையும் குறைத்துவிடும்!

மது ஆபத்தானது.!! ”குடி குடியை கெடுக்கும்”… மது அருந்தாதீர்கள்… அது உங்கள் வீட்டுக்கு… நாட்டுக்கு கேடு.

Read Previous

தமிழ் எழுத படிக்க தெரிந்தால் அரசு வேலை..!! சம்பளம் 41,800/-..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Read Next

மா இலையில் கொட்டிக்கிடக்கும் ஏராளமான நன்மைகள்..!! என்னென்ன தெரியுமா?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular