
மது அருந்துபவர்கள் கவனத்திற்கு..!! மது அருந்துபவர்கள் கண்டிப்பாக இந்த பதிவை படிக்க வேண்டும்..!!
மது என்பது நம் உடலுக்கு மட்டுமல்ல நம் வீட்டுக்கும் கேடு விளைவிக்கும். மது என்பது உடலுக்கு ஆரோக்கியம் தருவது அல்ல என்பது நம்மில் பலருக்கும் தெரியும். இருப்பினும் மது அருந்துபவர்கள் எப்போது உணவு சாப்பிடுவது நல்லது என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
மது அருந்துபவர்கள் எப்போது உணவு சாப்பிடுவது நல்லது..?? ஆல்கஹால் வயிறு மற்றும் சிறுகுடல் வழியாக உங்கள் ரத்த ஓட்டத்தில் நுழைகிறது. உங்கள் வயிறு காலியாக இருந்தால், ஆல்கஹால் உங்கள் ரத்த ஓட்டத்தில் வேகமாக நுழையும். இது உங்களை விரைவாக சோர்வடைய செய்யும். எனவே மது அருந்தும் முன்பு சாப்பிட வேண்டும். மது அருந்துவதற்கு முன் உணவு உண்பதால் பல நன்மைகள் உள்ளன. முதலில் உங்கள் வயிற்றில் உள்ள உணவின் நீர் உள்ளடக்கம் மதுவை நீர்த்துப்போக செய்கிறது. இரண்டாவதாக வயிற்றில் ஏற்கனவே இருக்கும் உணவில் உள்ள விரதங்கள் மற்றும் கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்து ஆகியவை ஆல்கஹால் உறிஞ்சப்படுவதை மெதுவாக்கும். இறுதியாக ஆரோக்கியமான உணவு உங்கள் உடலுக்கு வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்களை வழங்குகிறது. இது ஆல்கஹால் பாதிப்பை குறைக்கிறது.