
இன்றைய சமூகத்தில் இளையவர் முதல் பெரியவர் வரை குடிக்கு அடிமையாகி விட்டனர், குடியிலிருந்து மீள்வதற்கு ஆயிரம் காரணங்களை சொல்லி தனது உடலையும் தனது குடும்ப வாழ்வையும் சீரழித்து கொண்டிருக்கின்றனர்..
இன்பம் என்று நினைத்து மதுவை தேடி செல்கின்றனர் பலர் ஆனால் அதுவே பின்னால் தீவிர பிரச்சனையாக மாறும் என்று அவர்கள் அறிவதே இல்லை அறிந்தும் அதனை விடுவதும் இல்லை, மதுப்பழக்கம் மனநலத்தை பாதிக்கும் சேர்த்து உடல் நலத்தையும் கொன்றுவிடும் இதனால் குடும்பத்தில் உள்ள சுமூகமான சூழல் மறைந்து நிம்மதியற்ற வாழ்வு பிறக்கும் இதனால் வீடு மட்டுமல்ல நாடும் குடியை நோக்கி ஓடும், மது அருந்துவதால் வயிற்று வலி நரம்புத் தளர்ச்சி ரத்த வாந்தி மற்றும் மயக்க நிலை ஏற்படுகிறது பின்னால் இதுவே பெரிய நோயாக மாறுகிறது, மது அதிகம் அருந்துவோருக்கு மனநலம் பாதித்து மனசோர்வு ஏற்படுவது வழக்கமாகிவிடும், மேலும் மது குடிப்பதனால் வன்கொடுமைகள் பாலியல் தொந்தரவு போன்ற தகாத செயல்களையும் செய்வதற்கு தூண்டுதலாக அமைகிறது, மது போதையில் செல்லும்போது விபத்துக்கள் நிறைகிறது இந்த விபத்தில் சில நேரங்களில் உயிரிழந்து போவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது, குடிப்பழக்கத்திற்கு ஆளாகிவிட்டதை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம் மன பதட்டம் நடுக்கம் மற்றும் வாயு உளறல் இவற்றை வைத்து நாம் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக உள்ளோம் என்று தெரிந்து கொள்ளலாம் மேலும் குடிப்பழக்கத்திலிருந்து வெளிவருவதன் மூலம் உடலும் மனதும் சுற்றமும் சூழலும் நல்லதாகவே மாறும் குடியை விடுவோம் குடும்பத்தை காப்போம்..!!