
மது அருந்தும் பழக்கம் உடையவர்கள் அடுத்த நாள் காலையில் எழுந்திருக்கும் வேளையில் ஹேங்கொவரால் அவதிப்பட்டு வருகின்றனர், மேலும் இந்த பிரச்சனையில் இருந்து வெளிவருவதற்கு சில வழிமுறைகள் இருப்பதாக மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு கூறுகிறது.
அதாவது ஹேங்கொவரால் அவதிப்படும் மதுபிரியர்கள் தேன் மற்றும் தேங்காய் தண்ணீர் குடிப்பதனால் இவற்றை கட்டுப்படுத்த முடியும் என்றும் இவற்றில் உள்ள எலக்ட்ரோலைட் திரவம் ஹேங்கொவரை குறைப்பதாகவும் உடலில் உள்ள ஊட்டச்சத்துக்களை மீட்டெடுப்பதாகவும் மேலும் லெமன் அல்லது லெமன் டீ குடிப்பதனால் ஹங்கொவரை கட்டுப்பாட்டில் வைக்க முடியும் என்று மருத்துவ நிபுணர்கள் கொண்ட குழு அறிவித்துள்ளது..!!