மது போதையில் தகராறு..!! நண்பனை அடித்தே கொன்ற சக நண்பர்கள்..!! திருச்சி அருகே பயங்கரம்..!!

திருச்சி மாவட்டம் உறையூர் வசித்து வருபவர் குணசேகரன்- ராணி தம்பதியினர். இவர்களுக்கு விஜயகுமார், தர்மா என்கின்ற இரண்டு மகன்களும் ரேவதி என்ற ஒரு மகளும் உள்ளார்.

இந்நிலையில் தம்பதியினர் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 15 ஆண்டுகளாக பிரிந்து வாழ்கின்றனர். இந்த சூழலில் மது போதைக்கு அடிமையான குணசேகரன் தினமும் குடித்துவிட்டு சாலை ஓரங்களில் படுத்து உறங்குவதை வழக்கமாய் கொண்டுள்ளார்.

இந்நிலையில் சம்பவ தினத்தன்று குணசேகர் தனது நண்பர்களுடன் அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தார். அப்பொழுது அவர் நண்பர்களுக்கும், குணசேகருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த அவரது நண்பர்கள் குணசேகரை கடுமையாய் தாக்கி அங்கே விட்டு சென்றனர்.

இதை தொடர்ந்து மறுநாள் காலை அவ்வழியே சென்றவர்கள் குணசேகரன் இறந்து கிடப்பதை பார்த்து காவல் துறைக்கு தகவல் அளித்தனர். அதன் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல் துறையினர் இறந்து கிடந்த குணசேகரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்துள்ள காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read Previous

தாயின் கண் எதிரே நடந்த கொடூரம்..!! 4 வயது குழந்தை மூளை சிதறி பலியான அதிர்ச்சி சம்பவம்..!!

Read Next

சோகம்.. நண்பருடன் பைக்கில் சென்ற போது விபத்தில் சிக்கி உயிரிழந்த நீதிபதியின் மகள்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular