திருச்சி மத்திய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகே நேற்று மாலை வாலிபர் ஒருவர் மது போதையில் சாலையில் அமர்ந்து ரகளையில் ஈடுபட்டார். அந்த வாலிபர் சாலையில் சென்றவர்களை தகாத வார்த்தைகளால் திட்டிக் கொண்டு இருந்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இந்த வாலிபரின் செயல்களை கண்டித்து அங்கிருந்து செல்லுமாறு கூறினார் ஆனால் அவர் அதை கேட்காமல் தன்னை அப்புறப்படுத்த வந்த காவல்துறையினரின் கைகளை தட்டிவிட்டார். இதையடுத்து காவல்துறையினர் அவரைப் பிடித்து சாலையின் ஓரத்துக்கு கொண்டு சென்று விட்டனர். பின்னர் அவரிடம் விசாரணை நடத்தியதில் அவர் தனியார் பேருந்து நடத்துநர் என்பதும், மது போதையில் ரகளை செய்ததும் தெரிய வந்தது. இதையடுத்து போதை ஆசாமியை காவல்துறையினர் எச்சரித்து அனுப்பி வைத்தனர்.