
2024 ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்குப்பின் முதலாவது நாடாளுமன்ற கூட்டத்தொடர் கடந்த ஜூன் 24ஆம் தேதி தொடங்கி ஜனாதிபதி திரௌபதி முர்மு கடந்த 27ஆம் தேதி அன்று உரை நிகழ்த்தியுள்ளார்.
இவரது உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்கள் அவையில் நேற்று முன் தினம் விவாத பொருளாய் மாறியது. அப்போது காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி பங்கேற்று பேசியுள்ளார். அந்த உரையில் பாரத பிரதமர் நரேந்திர மோடி, பாரத ஜனதா மற்றும் ஆர் எஸ் எஸ் பற்றி கடுமையாக சாடி உள்ளார். சிவபெருமான், குருநாக், ஏசு கிறிஸ்து ஆகிய கடவுள்களின் படங்களை அவையில் காட்டி பேசி உள்ளார். இதற்கு பாரத பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா உள்ளிட்ட ஆவேசமாக பதில் அளித்துள்ளனர். இதனால் விவாதம் சூடு பிடித்தது.
இந்நிலையில் குடியரசுத் தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதில் அளித்து பிரதமர் நரேந்திர மோடி நேற்று உரையாற்றியுள்ளார். அந்த உரையில் மக்களவைத் தேர்தல் வெற்றி, ராகுல் காந்தியின் பேச்சு, நீட் வினாத்தாள் கசிவு விவகாரம் உள்ளிட்டவை குறித்து அவர் பேசியுள்ளார். அதன் பின் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மக்களவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேறியது. மக்களவைத் தேதி குறிப்பிடாமல் சபாநாயகர் ஓம் பிர்லா ஒத்திவைத்துள்ளார். இன்று வரை நடைபெறுவதாக இருந்த நிலையில் ஒருநாள் முன்னதாகவே அமர்வு நிறைவடைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.