
அமெரிக்காவில் உள்ள அனைத்து மாகாணங்களுக்கும் தங்களது குடியேற்ற கொள்கைகளை கடுமையாக்கி வருகின்றது.
இதனால் மத்திய அமெரிக்காவிலிருந்து வேலைக்காக மக்கள் அமெரிக்கா செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் மத்திய அமெரிக்காவில் வசிப்பவர்கள் அமெரிக்கா நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் மெக்சிகோ நாட்டை கடக்க வேண்டும். இதனால் அவர்களுக்கு வேலை கிடைப்பதில் மிகவும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் மெக்சிகோ அதிபர் ஆண்ட்ரெஸ் மானுவேல் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் அவர் தெரிவித்திருப்பது என்னவென்றால் “மெக்சிகோவில் ரயில் பாதை உள்ளிட்ட பெரிய அளவிலான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கூடுதல் மனித வளம் தேவைப்படுகின்றது. எனவே மெக்சிகோவில் பணிபுரிவதற்காக மத்திய அமெரிக்கர்களுக்கு தற்காலிக விசா வழங்கப்பட உள்ளது. இந்த விசாவின் மூலம் அவர்கள் மெக்சிகோவில் சட்டபூர்வமாக தங்கலாம்”, என்று தெரிவித்துள்ளார்.ஆண்ட்ரெஸ் மானுவேலின் இந்த திடீர் அறிவிப்பு மத்திய அமெரிக்கர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியையும் உற்சாகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.