
மணிப்பூரில் கடந்த 3 மாதங்களுக்கும் மேலாக கலவரம் நடந்து வருகிறது. மேலும் பெண்களுக்கு எதிராக நடக்கும் கொடுமை அங்கு தலைவிரித்தாடுகிறது. இந்நிலையில், மணிப்பூர் வன்முறையில் இரண்டாவது முறையாக மத்திய அமைச்சர் ரஞ்சன் சிங் வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இதனையடுத்து, “எங்களுக்காக அவர் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்” என போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். மேலும், முதல் தாக்குதலின் போதே, ‘மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே ஒன்று இல்லை’ என ரஞ்சன் சிங் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.