இந்தியாவில் பண்டிகை காலம் நெருங்கி வருவதால், மத்திய அரசு ஊழியர்களுக்கு இந்த அக்டோபர் மாத இறுதியில் 7வது ஊதிய குழுவின் கீழ் விலைவாசி படியின், அகவிலை படியானது 3% வரை உயர்த்தப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இவ்வாறு அகவிலைப்படியானது 3% உயரும் பட்சத்தில், ஊழியர்களின் சம்பளம் DA கணக்கின் படி எவ்வளவு அதிகரிக்கும் என்பதை இப்பதிவில் விரிவாக காண்போம்.
உதாரணமாக, இப்போது உங்கள் அடிப்படை சம்பளம் ரூ. 56,100 என்றால், 50% முன்பு நிர்ணயிக்கப்பட்ட சம்பளம் மற்றும் தற்போது உயரக்கூடும் 3% அகவிலைப்படியை சேர்த்து, 56,100*3/100= 1,683 ரூபாய் என்ற அடிப்படையில் ஆறுமாதத்திற்கு கணக்கு செய்தால், 6*1683=10,098 ரூபாய் அதிகரித்து உங்களுக்கு கிடைக்கும்.