
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஃபிட்மென்ட் காரணி உயர வாய்ப்புள்ளதாகவும், இதனால் ஊழியரின் சம்பளம் வருடத்திற்கு ரூ.96,000 வரை உயரலாம் எனவும் அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சம்பள உயர்வு:
மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கும் ஒரு முறை புதிய ஊதியக்குழு அமல்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மத்திய அரசு ஊழியர்கள் ஏழாவது ஊதிய குழு அடிப்படையில் அதற்கான பலன்களை பெற்று வருகின்றனர். மேலும், அடுத்த ஆண்டிலிருந்து எட்டாவது ஊதியக்குழு மத்திய அரசின் சார்பில் ஊழியர்களுக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வுடன் ஃபிட்மென்ட் காரணியையும் அரசு உயர்த்த இருப்பதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, ஃபிட்மென்ட் காரணியை பொறுத்தே மத்திய அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில், ஃபிட்மென்ட் காரணி அதிகரிப்பு குறித்து மத்திய அரசு கூடிய விரைவில் ஒரு அறிவிப்பை வெளியிடும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும், ஃபிட்மென்ட் காரணி உயர்த்தப்பட்டால் மத்திய அரசு ஊழியர்களுக்கு அடிப்படை சம்பளத்தில் நல்ல உயர்வு இருக்கும் எனவும், மத்திய அரசு ஊழியரின் அடிப்படை சம்பளம் ரூபாய் 18,000 எனில் அடிப்படை ஊதியத்தில் ரூ.8000 வரை சம்பள உயர்வு கிடைக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு ஆண்டிற்கு மட்டுமே 96 ஆயிரம் அளவுக்கு உயர்வு கிடைக்கும் எனவும் அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும், ஃபிட்மென்ட் காரணி 2.60 மடக்கில் இருந்து மூன்று மடங்காக அரசு உயர்த்தலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.