மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு – மாநில அரசு ஊழியர்கள் போராட்டம்!..

மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் அதனை எதிர்த்து மாநில அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அகவிலைப்படி உயர்வு:

மத்திய அரசு ஊழியர்களுக்கு நீண்ட எதிர்பார்ப்புகளுக்கு பிறகு நேற்று ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி குறித்த அதிகாரபூர்வமான அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதாவது, ஜூலை 1 ஆம் தேதி நிலவரப்படி மத்திய அரசு ஊழியர்களுக்கு 4% அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே, மத்திய அரசு ஊழியர்கள் 42% அகவிலைப்படி அடிப்படையில் அதற்கான பலன்களை பெற்று வந்தனர்.

இந்நிலையில், தற்போது மீண்டும் 4% உயர்வு உயர்த்தப்பட்டு 46% ஆக அகவிலைப்படி வழங்கப்படவுள்ளது. இந்நிலையில், வங்கதேச மாநில ஊழியர்கள் மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக 4% அகவிலைப்படி வழங்கப்பட்டதையடுத்து கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

அதாவது, மத்திய அரசு ஊழியர்களுடன் ஒப்பிடும் போது மாநில அரசு ஊழியர்கள் 40% குறைவான அகவிலைப்படியை பெற்று வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் அம்மாநில அரசு ஊழியர்கள் 6% அகவிலைப்படி அடிப்படையில் மட்டுமே பலனை பெறும் நிலையில் மாநில நிர்வாகத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

Read Previous

அதிகளவில் பரவி வரும் டெங்கு பாதிப்பு .. தடுப்பூசி பணிகள் தீவிரம் – அரசு நடவடிக்கை!..

Read Next

தீபாவளி பண்டிகைக்கு ரயில் டிக்கெட் முன்பதிவு செய்வோர் கவனத்திற்கு – WhatsApp-ல் டிக்கெட் விவரங்கள்!..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular