மத்திய அரசின் ‘யந்திரா இந்தியா லிமிடெட்’ நிறுவனத்தில் 3,979 காலி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 18-35 வயதுடையவர்கள், ITI மற்றும் ஐ.டி.ஐ அல்லாத பிரிவுகளுக்கு மார்ச் 3-க்குள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். எவ்வித தேர்வும் இன்றி சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் மட்டுமே நடைபெறும் இந்த ஆள்சேர்ப்பில், தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.9,600 வரை உதவித்தொகை வழங்கப்படும்.




