அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி(DA) மற்றும் அகவிலை நிவாரணம்(DR) ஆனது 6 மாதத்திற்கு 1 முறை என்ற கணக்கில் வருடத்திற்கு 2 முறை உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், 2025 ஆண்டில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு 7வது ஊதிய குழுவின் கீழ் மத்திய அரசு ஊழியர்களுக்கு எப்போது அகவிலைப்படி உயர்த்தப்படும் என்ற புதிய அறிவிப்பு ஒன்றை அகில இந்திய நுகர்வோர் குறியீட்டு அமைப்பு(AICPI) வெளியிட்டுள்ளது.
அதாவது, 2025 ஆண்டின் ஜனவரி-ஜூன் மற்றும் ஜூலை-டிசம்பர் என்ற காலத்திற்கான குறியீட்டை மதிப்பாய்வை செய்த பின்னர், 12 மாத சராசரி AICPI மதிப்பிற்குபிறகDAஉயர்வு அறிவிக்கப்படுகிறது. தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி 53% ஆக உள்ளது. மேலும், இது 2025 ஜனவரி மாதம் அகவிலைப்படி உயர்த்தினால் 56% ஆக அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த அகவிலைப்படி நடைமுறைக்கு வந்தால், நீங்கள் பெறும் மாத வருமானத்தில் எவ்வளவு உயரும் என்பதை பார்ப்போம். குறைந்தபட்ச ஊதியம் பெறுபவர்களுக்கு வருடத்திற்கு ரூ.6480 கூடுதலாக கிடைக்கும். உதாரணமாக, இப்போது நீங்கள் குறைந்தபட்ச ஊதியமாக ரூ.18,000 பெறுகிறீர்கள் என்றால், DA 56% என்றால் 18,000 X 56% என்ற பார்முலாவின் மூலம் ரூ.540 கூடுதலாக பெறுவார்கள்.