மத்திய கிழக்கு நாடான ஈராக்கில் 18 வயதிற்கு குறைவான பெண்களுக்கு திருமணம் நடக்கிறது என்றும் இதில் சிலர் 15 வயதை கூட பூர்த்தி அடையாதவர்களும் கூட என தெரிய வந்தது.
மத்திய கிழக்கு நாடான ஈராக்கில் 20 முதல் 24 வயதுடைய பெண்களில் 28% பேர் 18 வயது பூர்த்தியாக முன்னே பெற்றோர்களால் திருமணம் செய்து கொண்டனர் என்றும், இவர்களில் 7% பேர் 15 வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொண்டதாகவும் UNICEF தெரிவித்துள்ளது. இந்த நிலையில் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பெண்களின் திருமண வயது 9 ஆகவும் ஆண்களின் திருமண வயது வந்து 15 ஆகவும் குறைக்கக்கூடிய சர்ச்சைக்குரிய மசோதா ஈராக்கில் மனு தாக்கல் செய்து குற்றச்சாட்டு வைத்துள்ளது, மேலும் இதனை குழந்தை திருமணம் என்றும் இதனை தடுத்து நிறுத்த வேண்டும் என்றும் சமூக வலைதளங்களில் பரவலாக பேசிக் கொண்டு வருகிறது..!!