நமது நாட்டின் பிரதமர் மோடி அவர்கள் மூன்றாவது முறையாக ஆட்சி அமைத்த பின்னர் அவர் தலைமையில் நடந்த முதல் நாடாளுமன்ற பட்ஜெட் சில நாட்களுக்கு முன்னர் நடந்தது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்த பட்ஜெட்டில் ஏழை எளிய மக்களுக்கு எந்த பட்ஜெட்டும் இல்லை என்று புகார்கள் வரிசையாக முன் வைக்கப்பட்டனர்.மேலும் அந்த அறிவிப்புகள் நடுத்தர மக்களை பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.
இதை மத்திய அரசு சரி செய்யும் வகையில் நிதி மசோதாவில் அறிவித்த சொத்து வரி தொடர்பான சில நிபந்தனைகள் மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது .இது வரி செலுத்துவோருக்கு ,ரியல் எஸ்டேட் நிறுவனத்திற்கு பெரும் நிம்மதியை அளிக்க உள்ளது.
மேலும், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் வரி சலுகையை வழங்குவதற்காக நிதி மசோதாவில் திருத்தங்களை முன்வைத்துள்ளார்.இத்தகைய அறிவிப்புக்காக தான் ஒட்டுமொத்த இந்தியாவும் காத்துகொண்டு இருக்கிறது.