
தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியா கொண்டு வரப்பட்ட பெண் சிறுத்தை ஒன்று உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதியில் தென் ஆப்பிரிக்காவில் இருந்து மத்திய பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு 11 சிறுத்தைகள் கொண்டு வந்து பராமரிக்கப்பட்டுவந்தன. அவற்றில் 8 சிறுத்தைகள் ஏற்கனவே உயிரிழந்த நிலையில், சற்றுமுன் தாத்ரி என்ற பெண் சிறுத்தை உடல்நிலை சரியில்லாமல் இறந்துள்ளது. சிறுத்தைகள் உயிரிழப்பால் அந்த பகுதி மக்கள் பெரும் கவலையில் உள்ளனர்.