Oplus_131072
ஒரு சிலர் வானமே இடிந்து விழுந்தாலும் கவலைப்படாமல் வயிற்றை நிரப்பிக் கொண்டு இயல்பாக இருப்பார்கள்.
ஆனால் மிகப்பெரும்பாலானோர்க்கு சிறு மன அழுத்தம் ஏற்பட்டாலும் வயிற்றின் செரிமானம் முற்றாக பாதிக்கப்பட்டுவிடும்.
மன அழுத்தம் ஏற்பட்டால் அதை தாங்க இயலாத குடல் அதற்கு எதிர்வினை புரிகிறது. மன அழுத்தம் ஏற்படும்போது மூளை குடலுக்கு அனுப்பவேண்டிய கட்டளைகள் தெளிவற்றுப் போய்விடுகிறது.
இவ்வாறு கலக்கமடைந்துவிட்ட கட்டளைகள் நமது செரிமான மண்டலத்தின் முக்கிய பகுதியான குடலின் சுவற்களை அலரிக்கை அடையச்செய்துவிடுகின்றன.
இதனால் குடலின் உட்சுவர் வீங்கி அதன் பிடிமானத்தை இழந்து விரிசல் அடைகிறது.
அரைகுறை செரிமானத்தால் உணவு சீராக நுண்துகள்களாக அறைக்கப்படாமல் பெரிய பருக்குகளாகவே இருந்து விடுகின்றன. இந்த பருக்குகள் குடலில் ஏற்பட்ட விரிசல்களினூடே உடலினுள் ஊடுருவி விடுகிறது.
இவ்வாறான முறையற்ற செரிமானத்தினால் தேவையான சத்துக்கள் தேவையான உறுப்புகளுக்கு தேவையான நேரத்தில் கிடைக்காமல் போய்விடுகிறது.
மன அமைதியும் குடலும்:-
நமது குடல் மேலிருந்து கீழ்வரை ஏராளமான ‘தகவல் நரம்புகள்’ வாயிலாக மூளையுடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ளன.
இந்த நரம்புகள் குடலில் இணையும் இடங்களில் ‘தகவல் வாங்கிகள்’ அமைந்துள்ளன.
‘தகவல் நரம்புகள்’ மற்றும் ‘தகவல் வாங்கிகள்’ மூலக்கூறுகள் மூளையினால் உறுவாக்கப் பட்டவையாகும்.
மனநிலையில் ஏற்படும் ஒவ்வொரு சிறு மாற்றமும் உடலில் மூளையின் மீது தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாகும்.
மனம் என்பது நமது உடலின் உயிர்மூலக்கூறுகள் மற்றும் நமது உடல்சார்ந்து வாழுகிற கோடிக்கணக்கான நுண் உயிரிகளின் தேவைகளின் தகவல் தொகுப்பு ஆகும்.
இவ்வுயிரிகளின் ஒட்டுமொத்த தேவைகள் உடலின் நரம்புத் தொடர் மற்றும் நுண் தொலை தொடர் மின் ஊட்டங்கள் வாயிலாக ‘ஒரு அருவமாக’ உடலெங்கும் அலையாக பொங்கிக் கொண்டே இருக்கும்.
அந்த மன அலைகள் அனைத்தும் தங்கள் மின் தூண்டல் தேவைக்காக எந்த நேரமும் இதயத்தின் பருப்பொருளான குருதியை சார்ந்து இருக்கும் வகையில் அமைந்துள்ளது.
அதாவது அவ்வகையான குருதி உடல் முழுவதும் ஓடும்போது அதன் மூலக்கூறுகளது மின் காந்த சக்தி வெளிப்பாடுகளை நம்பியே மன ஓட்டம் அமைகிறது.
இந்த மன ஓட்டம் தனது தேவைக்காகவே ஒவ்வொரு உடலின் செயல்பாடுகளையும் தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்கிறது. மனதின் சுய நலத்திற்காகவே உடலின் அனைத்து செயல்பாடுகளும் நிர்ணயிக்கப்பட வேண்டும். அவ்வாறான வேலைகளை மேற்பார்வையிட மனதின் முதன்மை மேலாளராக மூளை என்ற உடல் உறுப்பு வேலைக்கு அமர்த்தப்படுகிறது.
மனம் கலக்கமின்றி இருக்கும்போது கட்டளைகள் அமைதியான முறையில் மூளையால் வடிவமைக்கப்பட்டு உடல் எனப்படும் சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் சீரான முறையில் அனுப்பப்பட்டுக் கொண்டே இருக்கும்.
மனம் கலக்கம் அடைந்துவிட்டால் அந்த கலக்கத்திற்கு அடிப்படையான காரணத்தை உடனுக்குடன் தீர்த்துவைக்க வேண்டும் என்ற கிளர்ச்சி நிலையை உடல் உறுப்புகள் அடைந்து விடுகின்றன.
இவ்வாறான கிளர்ச்சி நிலையில் உடலின் எந்த மூலக்கூறுக்கு அல்லது உடலினுள் வாழுகிற எந்த நுண்ணுயிரிக்கு எவ்வளவு சக்தி மற்றும் மறு சீரமைப்பிற்கான சத்துக்களை வழங்கவேண்டும் என்ற கணக்கீடுகள் குழப்பம் அடைந்து விடுகின்றன.
நமது உடலினுள் காற்று மற்றும் உணவின் மூலம் இடைவிடாது நுழைகிற கோடிக்கணக்கான தீய கிருமிகளை அழித்து பாதுகாக்கிற நல்ல நுண்ணுயிரிகளுக்கு தொடர்ந்து பலம் தருவதே நமது உடலின் முதன்மை உயிர் செயல்பாடாக இருக்க வேண்டும். அதுதான் மூளையின் முக்கிய செயல்பாடும் கூட. ஆனால் மனம் கலக்கம் அடையும்போது மூளை தனது இந்த முக்கிய கடமையை தவறவிட்டுவிடுகிறது.
அடுத்ததாக,
மனம் கலக்கம் அடையும்போது நமது உணவின் செரிமானத்தில் இருந்து குடல் மறுசீரமைப்பு உள்ளிட்ட உயிர் மூலக்கூறுகள் மறு சீரமைப்பிற்கு எவ்வளவு சத்துக்கள் பிரித்தளிக்க வேண்டும் மற்றும் கை கால்கள், இதயம், நுரையீரல், சிறுநீரகம் போன்றவற்றின் செயல்பாட்டிற்கு எவ்வளவு சக்தியை பிரித்தளிக்க வேண்டும் என்ற கணக்குகள் முற்றாக தவறிப்போகின்றன.
இந்த ஒத்திசைவு தகர்வின்போது முதலில் பாதிப்படைவது உடலின் செரிமான மண்டலமான் குடல் பகுதிதான். ஏனென்றால் அங்கே தான் மிகவும் வீரியம் மிக்க அமிலங்கள் சுரக்கின்றன. அந்த அமிலங்கள் எந்த ஒரு திடப்பொருளையும் அரித்துவிடக்கூடியவை. அதன் வீரியத்தின் முன்னால் வயிறு மற்றும் குடலின் சுவர்கள் எம்மாத்திரம். ஆனால் அவ்வாறான அரிமானத்தை தாக்குப்பிடிப்பதற்கான தற்காப்பு ஏற்பாடுகளும் உடலியக்கத்தில் உறுவாக்கப்பட்டு உள்ளன.
ஆனாலும் நமது செரிமாண மண்டலத்தில் எந்த அளவிற்கு அமிலங்கள் சுரக்கின்றனவோ அதே அளவுக்கு உணவு சீரணிக்கப்பட்டவுடன் அந்த அமிலம் குடலின் உட்சுவர்களை அரிக்காமால் பாதுகாப்பதற்கான சளி போன்ற கழிம்பு உற்பத்தியாகி குடலின் உட்புறங்களில் தக்க நேரத்தில் பூசப்படுகின்றன.
உணவின்போது மன கலக்கம் ஏற்பட்டால் செரிமான அமிலம் சுறப்பதும் அதிகரிக்கும் அதை ஈடுசெய்வதற்கான அரிமான தடுப்பு சளியும் குடலினுள் தேவைக்கு அதிகமாக பூசப்படும். இந்த சளியானது குடலில் சத்துக்களை கிரகிப்பதற்கு உள்ள ‘குடல் உறிஞ்சிகள்’ எனப்படும் நுண்ணிய மயிர்கால் போன்ற புடைப்புகளை அடைத்துக் கொண்டுவிடும்.
இதனால் உடலின் பல்வேறு பாகங்களுக்கு செல்லவேண்டிய சத்துக்களும் சக்தியும் தடைபட்டுவிடுகிறது. உடலில் பலம் இல்லாத நிலையும் முக்கியமான பல உறுப்புகள் பலவீனம் அடையும் நிலையும் ஏற்படுகிறது.
அதே நேரத்தில் செரிமானம் முறையற்றுப்போய் குடலில் முறைப்படி வெளியேராமல் ஆங்காங்கே தங்கிவிடுகிறது. அப்படி தங்கி அங்கேயே மக்கும்போது ஏற்படும் வாயுக்களின் அழுத்தத்தால் குடலின் உட்சுவர்களில் விரிசல்களும் ஏற்படுகின்றன. இந்த விரிசல்கள் குடல் உறிஞ்சிகளை இல்லாமல் ஆக்கிவிடுகின்றன.
எனவே மன நிலையை தயார்படுத்துவதன் மூலம் உடலிம் செரிமான இயக்கத்தை சீராக வைத்துக்கொள்ள முடியும்.




