மனசு தான் எல்லாவற்றிற்கும் காரணம் மனசை சரியாக கைவசப்படுத்தினால் எல்லாம் நலமே..!!

நமது மனநிலையும் உடல் நிலையும் ஒன்றுக்கொன்று இணைந்து செயல்படுகிறது என்று உங்களுக்கு தெரியுமா…

இந்த கார்ப்பரேட் உலகத்தில் இப்போது எல்லோரும் ஓடிக்கொண்டே இருக்கிறார்கள் மனம் போன போக்கில் எல்லாவற்றையும் செய்துவிட்டு கடைசியில் உடல்நலம் குன்றி தவிக்கிறார்கள் தடுமாறுகிறார்கள். திங்கள் முதல் வெள்ளி வரை வேலை போராட்டம் அதே போல் ஐடி ஃபீல்டில் இருப்பவர்கள் நாள் முழுவதும் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு கோடிங் ரன்னாகவில்லை என்று மண்டையைப் பிய்த்துக் கொள்வார்கள். மெக்கானிக்கல் லைனில் இருப்பவர்கள் நாள் முழுவதும் மிஷின் பின்னாலேயே இருப்பார்கள் மண்டையை பிளக்கும் சத்தத்துடன். சேல்ஸ் லைனில் இருப்பவர்கள் ஆர்டர் பிடிக்க நாள் முழுவதும் அலைந்து திரிவார்கள் ஆக மொத்தத்தில் எல்லோரும் அந்த ஐந்து நாட்களில் நொந்து நூலாகி விடுவார்கள்..

ஆனால் சரி ஞாயிறு வந்தாலே போதும் அவர்கள் மனதை கண்டபடி அலையவிட்டு அது போன போக்கில் செல்வார்கள் கேட்டார் ரிலாக்ஸேசன் என்று சொல்வார்கள் விடுமுறை நாட்கள் மதியம் 12 மணிக்கு எழுந்து கொள்வார்கள் குளித்து பிரஷ் ஆகிவிட்டு வெளியில் கிளம்பி விடுவார்கள் சில பேர் பாரில் சென்று குடித்துக் கொண்டிருப்பார்கள் சிலர் தியேட்டருக்கு படம் பார்க்க சென்று விட்டு இங்கு அங்குமாக சுற்றுவார்கள். நாள் முழுவதும் கூத்தடித்துவிட்டு இரவு வீட்டிற்கு வந்து மறுபடியும் லேப்டாப்பில் எதையாவது பார்த்துவிட்டு இரவு 2 மணிக்கு மேல் தூங்குவார்கள் இவர்களின் கூற்றுப்படி இந்த இரண்டு நாளை இவ்வாறு கழித்தால் மனம் அமைதி பெறுகிறது மற்றும் ரிலாக்ஸ் கிடைக்கிறது என்று ஆனால் இவர்களின் உடல்நிலை இதனால் எப்படி பாதிப்படைகிறது என்பதை பற்றி இவர்கள் யோசிப்பதே இல்லை. வாரத்திற்கு இரண்டு நாட்கள் அதிகமாக குடித்தால் லிவர் கெட்டுப் போய்விடும் சிகரெட்டை பிடிப்பதால் லங்ஸ் ஆபத்து ஏற்படும் மனம் போன போக்கில் வாரத்திற்கு இரண்டு நாட்கள் கண்டபடி சாப்பிட்டால் வயிறு கெட்டுப் போகும். இரவு விடிய விடிய அமைதி என்ற பெயரில் லேப்டாப்பில் சினிமா பார்த்தால் தலைவலி வரும் கேஸ் அசிடிட்டி அல்சர் பிபி சுகர் போன்ற எல்லா விதமான நோய்களும் வரிசை கட்டி வரும். மனதை சந்தோஷமாக வைத்துக் கொள்கிறேன் என நினைத்து கொண்டு மனம் விரும்பியது எல்லாம் செய்தால் கடைசியில் அந்த மனம் வாழ்வதற்கு உங்கள் உடம்பும் இருக்காது..

மனதை அமைதிப்படுத்துவதற்கு எத்தனையோ முறைகள் இருக்கின்றன. ஒரு வாரம் நண்பர்களுடன் சேர்ந்து ஏதாவது ஒரு அனாதை ஆசிரத்திற்கு சென்று அவர்களுடன் சேர்ந்து சாப்பிட்டு கலகலப்பாக இருந்து விட்டு வரலாம் இல்லை என்றால் பக்கத்தில் இருக்கும் ஏதாவது ஒரு கிராமத்திற்கு சென்று இயற்கை ரசிக்கலாம் இல்லை என்றால் எங்கேயும் போகாமல் நிம்மதியாக தூங்கி எழுந்து அந்த இரண்டு நாட்கள் வேலைக்கு சாப்பிட்டு விட்டு சிறிது நேரம் ஓய்வு எடுத்தாலே போதும் ஆனால் மனம் கேட்பது கிடையாது சனிக்கிழமை வந்தாலே அது ஓடும் தன் இஷ்டத்திற்கு. ஏற்கனவே வாரத்தில் 5 நாட்கள் சரியான தூக்கம் இல்லாமல் வேலைக்கு உணவு இல்லாமல் பாடுபடுகிறார்கள் அதிலும் இன்னும் கொஞ்சம் நஞ்சை நீங்களே ஏன் தனக்குத்தானே சேர்த்துக் கொள்கிறீர்கள் இளைஞர்களே கோடி ரன் ஆகாவிட்டால் அல்லது பேலன்ஸ் சீட் டெய்லியாக விட்டால் என்ன நீங்கள் முழுமையாக போராடி அதை சரி செய்கிறீர்கள் இல்லையா? அதைப்போல உங்கள் மனதையும் உங்களின் கண்ட்ரோல் வைத்துக் கொள்ளுங்கள் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழுங்கள்..!!

Read Previous

இந்த பழக்கங்கள் இருந்தால் வறுமையில் இருந்து வெளிவரவே முடியாது எச்சரிக்கும் சாணக்கியர்…!!

Read Next

கட்டளைகள் பத்து எத்தனை சொன்னாலும் போதாது. அத்தனையும் முத்து…!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular