மனதிற்கு அமைதியை கொடுக்கும் மல்லிகை பூ மருத்துவம்..!! கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க..!!

மல்லிகை பூவை பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. அனைவரையும் மயக்கும் ஒரு பூ என்றால் அது மல்லிகை பூ தான். பெண்கள் விரும்பி வைத்துக் கொள்ளும் பூ மல்லிகை பூ. ஆண்கள் விரும்பி வாங்கி கொடுக்கும் பூ மல்லிகை பூ தான்.

அப்படிப்பட்ட மல்லிகை மல்லிகை பூ வெறும் வாசனக்காகவும், அழகுக்காகவும் மட்டும் பயன்படாமல் மருத்துவத்திற்கும் சித்த வைத்தியத்தில் ஒரு சிறந்த மருந்தாகவும் பயன்படுகிறது.

மல்லிகை பூ, மல்லிகை எண்ணெய், மல்லிகை வேர், என மல்லிகையின் பல்வேறு பாகங்களும் மருந்தாக பயன்படுகிறது.

மணக்கும் மல்லிகையின் மருத்துவ குணங்கள்:

  • மல்லிகைப் பூவை சிறிதளவு எடுத்து தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அந்த நீரை குடித்து வந்தால் வயிற்றில் உள்ள பூச்சிகள் அழிந்து வயிற்று வலி ஏற்படாது. கொக்கி புழு, நாடாப் புழு போன்றவை அழிந்து விடும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கும்.
  • மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தினமும் மல்லிகை பூவை தலையில் வைத்தல் மன அழுத்தம் குறைவதோடு உடல் சூடு குறையும்.
  • வாய்ப்புண் இருப்பவர்கள் மல்லிகை பூவின் இலையினை சாப்பிட்டால்  நாளடவில் வாய்புண் குணமாகும் .
  • காலாணியால் அவதிப்படுபவர்கள் இதன் இலைச்சாறு கொண்டு தடவினால் விரைவில் குணம் கிடைக்கும்
  • மல்லிகையின் பூவுடைய எண்ணெய்,தலையில் தேய்த்து முழுகினால்,உடலுக்கு குளிர்ச்சி ஏற்படும்.
  • தலைவலி,தோல் பற்றிய நோய்கள், கண்னெரிச்சல் தீரும். பித்தத்தை தணித்து சீராக்கும். தலையில் நீர் கோர்த்தல், ஒற்றைத் தலைவலி போன்றவற்றிற்கு மல்லிகை எண்ணெய் சிறந்தது.
  • ஆறாத புண்களை ஆற்றும் தன்மை மல்லிகை எண்ணெய்க்கு உண்டு. மல்லிகைப் பூவை நன்கு கையில் வைத்து கசக்கி நெற்றியில் தடவினால் தலைவலி நீங்கும்.
  • உடலில் வீக்கம் உள்ள பகுதிகளில் மல்லிகைப்பூவை அரைத்து பூசிவர வீக்கம் மறையும். தாய்ப்பால் கொடுக்கும் தாய்மார்களுக்கு மார்பில் பால் கட்டிக்கொண்டு அவதிப்படுவார்கள். இவர்கள் மல்லிகைப்பூவை அரைத்து மார்பின்மீது பூசிவந்தால் பால் கட்டுதல் நீங்கி சீராகும்.
  • நேரங்கடந்த உணவு, சத்தான உணவின்மை போன்றவற்றினால் சிலருக்கு நரம்புகள் தளர்ச்சியடைந்து உடலில் பல பாதிப்புகளை ஏற்படுத்தும். இவர்கள் மல்லிகைப்பூக்களை நிழலில் காயவைத்து பொடி செய்து தேன் கலந்து சாப்பிட்டால் நரம்புத்தளர்ச்சி நீங்கும்.
  • நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்கள் மல்லிகைப் பூக்கள் ஒன்றிரண்டை உண்டு வர நோய் எதிர்ப்புச் சக்தி உயரும்..
  • மல்லிகை மொட்டுகளை சாப்பிட்டு வந்தால் சிறுநீரகம் சம்பந்தப்படட கோளாறுகள், கண் நோய்கள், மஞ்சள் காமாலை மற்றும் சில பால்வினை நோய்களும் குணமாகும்.
  • கண்களில் சதை வளர்வதால் ஏற்படும் பார்வைக் கோளாறுகள் நீங்க மல்லிகைப் பூக்களை நீரில் கொதிக்க வைத்து அதனுடன் பனங்கற்கண்டு சேர்த்து அருந்தி வந்தால் கண்களில் ஏற்பட்ட சதை வளர்ச்சி குறையும்.
  • மல்லிகைப் பூக்களை நிழலில் காயவைத்து அதை பொடியாக்கி நீரில் கலந்து குடித்து வந்தால் சிறுநீரக கற்கள் தானாகவே கரைந்து விடும் என்று கூறப்படுகிறது.

Read Previous

கோவிலில் செய்ய கூடாத சில விஷயங்கள்..!! இனிமே இப்படி பண்ணவே பண்ணாதீங்க..!!

Read Next

தடகள வீராங்கனைக்கு பாலியல் வன்கொடுமை..!! 20 பேர் கைது..!! 62 பேர் மீது புகார்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular